சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

குடிநீர் வாரிய கஜானாவை காலி செய்யும் அதிகாரி!

Added : மார் 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 குடிநீர் வாரிய கஜானாவை காலி செய்யும் அதிகாரி!

குடிநீர் வாரிய கஜானாவை காலி செய்யும் அதிகாரி!

''ஜாதி அடிப்படையில, பதவிகளை நிரப்ப இருக்காங்க வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.''எங்கன்னு விளக்கமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''தி.மு.க., பொதுச் செயலர் பதவி, துரைமுருகனுக்கு தான்கிறது, உறுதியாகிட்டு... அதே நேரம், பொருளாளர் பதவிக்கு, டி.ஆர்.பாலு, கனிமொழி, பெரியசாமி, நேரு, பொன்முடி, வேலு, ராசான்னு பலரும் வரிசை கட்டி நின்னுட்டு இருக்காவ வே...''இப்ப, கட்சியின் துணை பொதுச் செயலர்களா, பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன்னு மூணு பேர் இருக்காவ... ''துணை பொதுச் செயலர் பதவிகளை இன்னும் அதிகப்படுத்தி, ஜாதி அடிப்படையில சிலரை நியமிக்க, தலைமை முடிவு பண்ணியிருக்கு வே...''இதனால, முக்குலத்தோர், நாடார், முதலியார், முத்தரையர், உடையார், நாயுடு, முஸ்லிம்னு பல, 'மாஜி'க்கள் மத்தியில, துணை பொதுச் செயலர் பதவியை பிடிக்க போட்டி நிலவுது வே...'' என்றார், அண்ணாச்சி.''போலீசாருக்கு குடுத்த வாகனங்களை, நைசா தள்ளிண்டு போயிட்டா ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு சென்றார், குப்பண்ணா.''அவங்ககிட்டயே, 'வேலை'யை காட்டுனது யாருங்க...'' என, விசாரித்தார் அந்தோணிசாமி.''போலீசாரின், 'ஹைவே பேட்ரோல்' ரோந்துக்காக, மாவட்டத்துக்கு ஆறு, 'டொயோட்டா கிரிஸ்டா' கார்களை குடுத்திருக்கா... ஆனா, எஸ்.பி.,க்கள் பலரும், இந்த புதிய வாகனங்களை வாங்கிட்டு, பழைய வாகனங்களையே குடுத்திருக்கா ஓய்...''ஏன்னா, புதிய வாகனங்களை, அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் பலரும், தங்களது, 'எஸ்கார்ட்' பணிக்கு வேணும்னு கேட்டு வாங்கிட்டா... இதனால, பாடாவதி பழைய வாகனங்கள்ல, போலீசார் ரோந்து போயிண்டு இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.''நிதி நெருக்கடிக்கு காரணமா இருக்காருங்க...'' என, கடைசி விஷயத்திற்கு மாறினார், அந்தோணிசாமி.''நாடே நிதி நெருக்கடியில தான் இருக்குது... நீங்க, யாரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''சென்னை குடிநீர் வாரியத்துல, நிதிப் பிரிவுல இருக்கிற ஒரு அதிகாரி, கான்ட்ராக்டர்களுக்கு கரெக்டா பணம் வழங்குறதுல மட்டும் தான் ஆர்வம் காட்டுறாருங்க... ''அவங்க, 'டெண்டர்' எடுத்த பணிகளை முடிக்க, கால அவகாசம் வழங்குறது, அவங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்றதுலயும் கூடுதல் அக்கறையோட செயல்படுறாருங்க...''இதுக்கான, 'பிரதிபலன்' அதிகாரிக்கு சரியா வந்துடுதுங்க... இவரது, தில்லாலங்கடி வேலைகளுக்கு ஒத்து போகாத அதிகாரிகளை இடமாற்றம் பண்றது, மிரட்டுறதுன்னு அடாவடி பண்றாருங்க... 'இப்படியே போயிட்டு இருந்தா, சென்னை குடிநீர் வாரியத்தின் கஜானா காலியாகிடும்'னு எல்லாரும் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.அன்வர்பாயின் மொபைல் போன் ஒலிக்க, ''ஹலோ முத்துக்குமாரசாமி... சொல்லுங்க பா...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-202008:51:33 IST Report Abuse
மனிதன் yethai thindraal pithaam theliyum yendra nilaimaiyil iruppathu ithilirunthu புரிகின்றது
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-மார்-202006:10:10 IST Report Abuse
D.Ambujavalli நேர்மையாக இருந்ததால் தற்கொலைவரை தள்ளப்பட்டவரும் முத்துகுமாரசாமிதான் அந்தப்பேருடன் இந்த ஊழல் அதிகாரி என்ன ஒரு முரண்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X