பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் மோடி கூறியதை பின்பற்ற முதல்வர் இ.பி.எஸ் வேண்டுகோள்

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியது போல 9 அம்ச நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.latest tamil newsமுதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளதாவது:
பிரதமர் மோடி கூறியது போலவே, சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்றுங்கள்.
மார்ச்-22 அன்று சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்காது.
மார்ச்-22 அன்று காலை 7 முதல் இரவு 9 மணி வரை அரசு பஸ்கள் ஓடாது. தனியார் பஸ்கள், மினிபஸ்களும் இயங்க கூடாது.
நாளை முதல் மார்ச்31 வரை அரசு, மற்றும் தனியார் நுாலகங்கள் மூடப்படும்.
நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தந்து கொரோனா வைரஸை ஒழிக்க வேண்டும். பிரதமர் மோடி கூறியதை தமிழக மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


latest tamil news
விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்


சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு தினரும் 150-க்கும் மேற்பட்டோர் கொரோனா அச்சத்துடன் பரிசோதனைக்காக . வழக்கமானவிடுமுறையாக கருதி பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு தனியாக ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டுள்ளது. மத்திய,மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
21-மார்-202017:59:42 IST Report Abuse
Baskar இங்கு உன் மனைவி குழந்தைகளை விட்டு விட்டு நீ என்ன செய்கிறாய் .இன்னும் ஒட்டகத்திற்கு பால் கறந்து கொண்டும் சாணி வாரி கொண்டும் இருக்கிறாயா. உடனே ஊருக்கு வந்து உன் மனைவி குழந்தைகளை பார்.. நாகூரில் ஒரு ஒரு பழமொழி சொல்வார்கள் முக்காடை தூக்கி பார் அதற்க்கு பின் சொல்ல கூடாது . நீ அங்கு உட்கார்ந்து கொண்டு கருத்து எழுத்து கிராய். உனக்கே வெட்கமாயில்லையா.
Rate this:
Cancel
21-மார்-202011:43:11 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren V. Vinoth kumar , Reading, vangiya kadan, thirupi kattina bank en dival aguthu? unga princess art ku 10 kodi kuduthu vankittu vetkam illama Modiji ya kurai solrathu. thiruntunga.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
21-மார்-202010:23:43 IST Report Abuse
GMM சுய ஊரடங்கில் மக்கள் வீட்டில் இருப்பர். மருத்துவர்கள் வீடு வந்து மக்களை பரிசோதிக்க முடியும்.(குழந்தை போலியோ வீட்டில் வந்து போடுவது போல்) வருவாய் உள்ளவரிடம் சிறிது பணம் வசூலித்தாலும் தவறு இல்லை. கிருமி பரவுகிறது. அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X