பொது செய்தி

இந்தியா

பொருளாதாரத்தை குதறும் 'கொரோனா':ஆய்வில் தகவல்

Updated : மார் 22, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Corona, கொரோனா,  பொருளாதாரத்தை ,குதறும், பணப்புழக்கம், சரிவு,  இயல்பு நிலை,ரிசர்வ் வங்கி

மும்பை : கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, நாட்டிலுள்ள நிறுவனங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்றும், பணப் புழக்கத்திலும் சரிவு உண்டாகும் என்றும், ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்திய வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான, 'பிக்கி' மேற்கொண்ட ஆய்வில், இவ்வாறு தெரிய வந்துள்ளது.


மந்த நிலை


இது குறித்து, இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா பாதிப்புகள் குறித்து, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் போது, 50 சதவீத நிறுவனங்கள், தங்களின் செயல்பாடுகளில் பாதிப்புகள் ஏற்படும் என தெரிவித்தன. மேலும், 80 சதவீத நிறுவனங்கள், பணப் புழக்கத்தில் சரிவு ஏற்படும் என தெரிவித்துள்ளன.ஏற்கனவே, நாடு பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலையை சந்தித்து வருகிறது. இப்போது பொருளாதாரத்தில், புதிதாக ஒரு பாதிப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டு வருகிறது.இது, தேவை மற்றும் வினியோகம் ஆகியவற்றில் கடுமையான இடையூறுகளை விளைவிக்கும். தொடர்ந்து, வளர்ச்சியில் சரிவை ஏற்படுத்தும் என நிறுவனங்கள் கருதுவது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா தாக்குதலின் ஆரம்பகட்டமாக இருந்தபோதிலும்கூட, 53 சதவீத நிறுவனங்கள், இதனால் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளன. மேலும், 80 சதவீத வணிகங்கள், நோய் தொற்றால், பணப் புழக்கத்தில் சரிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளன.பொருட்கள் மற்றும் சேவைகளின் தேவை மற்றும் வினியோகம் ஆகியவற்றின் மீதான நேரடி தாக்கம் ஒருபுறமிருக்க, பொருளாதார செயல்பாடுகள் குறைந்து வருவதால், பணப் புழக்கத்தில் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

இதன் விளைவாக, ஊழியர்களுக்கான சம்பளம், வட்டி, கடனை திருப்பிச் செலுத்துவது, வரி செலுத்துவது உள்ளிட்ட அனைத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இத்தகைய சூழலில், ரிசர்வ் வங்கி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் துறையை ஆதரிக்கும் வகையில், 1 சதவீதம் அளவுக்கு, வட்டி குறைப்பை அறிவிக்க வேண்டும்.வங்கிகளும், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகை சம்பந்தப்பட்ட விஷயங்களில், அனுசரணை காட்ட வேண்டும்.பணப் புழக்க விஷயங்களில், வங்கிகளும், ரிசர்வ் வங்கியும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.


திவால் சட்டம்மேலும், அரசும் வரி வருவாய் குறைய வாய்ப்பிருப்பினும், மூலதன செலவுகளை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. கொரோனா தாக்குதலால் அதிகளவில் பாதிப்பு ஏற்படக்கூடிய, சுற்றுலா, விமான துறைகளில், திவால் சட்ட நடவடிக்கைகளை சற்று நிறுத்தி வைக்க வேண்டும்.இந்த ஆய்வில், 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், வினியோகத் தொடரில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளன.

மேலும், 42 சதவீத நிறுவனங்கள், இயல்பு நிலை திரும்ப, மூன்று மாதங்கள் ஆகும் என தெரிவித்துள்ளன. 40 சதவீத நிறுவனங்கள், அலுவலகத்திற்கு வருவோரை பரிசோதிக்கின்றன. 30 சதவீத நிறுவனங்கள், வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை அமல் செய்துள்ளன.இவ்வாறு, பிக்கி தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
21-மார்-202020:39:51 IST Report Abuse
RajanRajan அடேய் யாருடா அங்கே கொரானாவை வாழ்த்துறது. அது வேற ஒண்ணுமில்லை அண்ணே அந்த மரக்கட்டில் பயில்வான் பொருளாதாரம் பற்றி கொரானா கானம் இசைக்கிறாரு.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-மார்-202018:38:34 IST Report Abuse
ஆரூர் ரங் பாஸ்போர்ட் இல்லாமல் வரும் கள்ளக்குடியேறிகளால்தான் பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்படுகிறது அவர்களைக்காக்க கடத்தலும் ஹவாலாவும் உதவுகின்றன . சி ஏ ஏ எதிர்ப்பு போன்றவையும் அதற்காகத்தான் . அடக்கிவைக்க தூத்துகுடி வழிதான் சிறந்தவழி
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா
21-மார்-202010:37:26 IST Report Abuse
Nallavan Nallavan எந்தப் பொருளாதாரம் குதறப்படுகிறது ???? ............கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த கே.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரியும் ஜெயந்தி ராணி, வீட்டுமனை பிரிப்பதற்கு ஒப்புதல் அளிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தாந்தோணிமலையில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஜெயந்தி ராணியை (48 வயது) கைது செய்தனர். சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை கரூர் விஜிலென்ஸ் போலீசார் ஆவணங்களைத் தயார் செய்து நள்ளிரவு 12.30 மணிக்கு கரூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். ஆனால் நீதிபதி நாளை ஆஜர்படுத்துங்கள் என்று உத்தரவிட்டார். இதையடுத்து அவரை சாப்பிடுவதற்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள் அப்போது அவருக்கு நெஞ்சு வலிப்பதாக சொல்லியிருக்கிறார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று, முதலுதவி அளிக்கப்பட்டது. இருப்பினும், எந்த சிகிச்சையும் பலனளிக்காததால், ஜெயந்தி ராணியின் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டவர் 24 மணி நேரத்திற்குள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X