வீட்டு தனிமையில் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
வீட்டு தனிமையில் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்


திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி., சுக்கேந்து சேகர் ராய், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு, கடிதம் மூலம், தகவல் தெரிவித்தார்.

'பாலிவுட்' திரைப்பட பின்னணி பாடகி, கனிகா கபூருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், சமீபத்தில் நடத்திய விருந்து நிகழ்ச்சியில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் மகனும், பா.ஜ., - எம்.பி.,யுமான துஷ்யந்த் சிங், கலந்து கொண்டார். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அவருக்கு நேர் பின்னால், திரிணமுல் காங்., - எம்.பி., டிரெக் ஓ பிரெய்ன் அமர்ந்திருந்தார். இதனால், அவரும், தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.


latest tamil news
விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், பார்லி., கூட்டத் தொடரிலும், துஷ்யந்த் கலந்து கொண்டது, பல எம்.பி.,க்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த இரு, எம்.எல்.ஏ.,க்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக, நேற்று அறிவித்தனர்.

துபாயில் இருந்து சமீபத்தில் திரும்பிய நபர் ஒருவர், திருமண நிகழ்ச்சியில், இரு எம்.எல்.ஏ.,க்களுடன் நெருங்கி நின்று, 'செல்பி' எடுத்துக் கொண்டார். அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, எம்.எல்.ஏ.,க்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதாக அறிவித்து
உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nanthakumar.V - chennai,இந்தியா
21-மார்-202011:23:46 IST Report Abuse
Nanthakumar.V @vetrikodikattu.....intha konjathuke thala kiru kirunguthe......micha meethi iruntha nalaiku post pannu pa....ithellam corono vida kodiya virus pola iruke....?
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
21-மார்-202010:16:25 IST Report Abuse
vbs manian பரவாயில்லை இந்த அரசியல் வாதிகளையும் தனிமையில் ஒடுக்கி வைக்க ஒரு சக்தி இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Pandiyan - Chennai,இந்தியா
21-மார்-202009:31:13 IST Report Abuse
Pandiyan ஆண்டவனா கையை வைக்கவேண்டிய இடத்தில கையை வைத்திருக்கிறார் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X