பொது செய்தி

தமிழ்நாடு

'சட்டசபை நடந்தால் தான் மக்களின் அச்சத்தை போக்க முடியும்'

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
சட்டசபை, முதல்வர், இ.பி.எஸ்,மக்களின் அச்சம்,எதிர்க்கட்சிகள் , கோரிக்கை


சென்னை : சட்டசபையை ஒத்திவைக்கும்படி, எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த முதல்வர், இ.பி.எஸ்., ''சட்டசபையை தொடர்ந்து நடத்துவதன் வாயிலாக, மக்களுடைய அச்ச உணர்வை போக்க முடியும்,'' என்றார்.சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: கொரோனா வைரஸ் பிரச்னை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 'ஞாயிற்றுக் கிழமை காலை முதல், மாலை வரை, யாரும் வெளியில் செல்ல வேண்டாம்' என, பிரதமர் அறிவித்துள்ளார். பல மாநிலங்களில், சட்டசபை கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

'கூட்டம் கூட்டாதீர்' என எச்சரித்து விட்டு, நாம் கூட்டமாக அமர்ந்து, விவாதிப்பது முறையா; மூத்த அமைச்சர் ஒருவர், தன் வீட்டு வாசலில், 'யாரும் என்னை பார்க்க வர வேண்டாம்' என, விளம்பரப் பலகை வைத்துள்ளார்; அவருக்கே அச்சம் இருக்கிறது. சட்டசபையை ஒத்திவைப்பது, பீதியை ஏற்படுத்துவதற்காக அல்ல. மக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்தில், எம்.எல்.ஏ.,க்கள் தொகுதியில் இருந்தால், தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வாய்ப்பு உருவாகும்.
தினக்கூலிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ரேஷன் பொருட்களை, நேரடியாக வீட்டுக்கு சென்று, கொடுக்கும் வசதியை, அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் செயல்படா விட்டாலும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, இந்த மாத சம்பளம் நிறுத்தப்படாமல் வழங்க, அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும்.சட்டசபை காங்., தலைவர் ராமசாமி: பிரதமர், 22ம் தேதி சுய ஊரடங்கு அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். 'ஒரே இடத்தில், 200 பேருக்கு மேல் கூடக்கூடாது' என்கிறீர்கள்; இங்கு, 230க்கும் மேற்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் வருகிறோம். '60 வயதிற்கு மேற்பட்டோர், வெளியில் வர வேண்டாம்' என்கிறீர்கள். முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், துணைத் தலைவர், சபாநாயகர் என, அனைவருக்கும், 60 வயதிற்கு மேலாகிறது. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், வெளியில் வருவதை தவிர்க்கும்படி கூறுகிறீர்கள். எதிர்க்கட்சி துணைத் தலைவர், துரைமுருகன் உட்பட, பலர் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். எனவே, சட்டசபையை ஒத்திவைக்க வேண்டும்.முஸ்லிம் லீக் - முகமது அபூபக்கர்: அனைவருடைய கோரிக்கையை ஏற்று, சட்டசபையைஒத்திவைக்க வேண்டும்.

மனிதநேய ஜனநாயக கட்சி - தமிமுன் அன்சாரி: சட்டசபையை ஒத்தி வைப்பதுடன், 'டாஸ்மாக்' கடைகளை மூட வேண்டும்.முதல்வர்: நாட்டின் நிலைமையை, மக்களுக்கு எடுத்து சொல்ல முடியும் என்பதற்கு தான் சட்டசபை கூடுகிறது. மக்களுக்கு ஏற்படுகிற பிரச்னைகளை, இங்கு தான் விவாதிக்க முடியும். சட்டசபை நடப்பதால், பாதிப்புகளை நீங்கள் சொல்கிறீர்கள்; நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.மக்கள் பணியாற்றுவதற்காகவே, மக்கள் நம்மை தேர்ந்தெடுத்து, அனுப்பி உள்ளனர்.

நாம் இங்கே கூடுவதால், நோய் ஏற்படும் என்ற, அச்சம் தேவையில்லை. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து, இங்கே தொற்றுநோய் வருகிறதால், அதை தடுக்கும் பணியில், அரசு முழு மூச்சுடன் ஈடுபட்டு உள்ளது.யாரும் அச்சப்பட தேவையில்லை. முழுமையாக பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் இருந்து, ஒருவருக்கு கூட, கொரோனா வைரஸ் பரவவில்லை. சட்டசபை நடந்தால் தான், மக்களுடைய அச்ச உணர்வை போக்க முடியும். இதன் வழியே, அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த செய்தி வெளியில் வரும். மக்களின் பிரச்னைகளை, எதிர்க்கட்சிகள் பேசினால், அரசு, அதற்குரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு, வசதியாக இருக்கும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
E Mariappan -  ( Posted via: Dinamalar Android App )
21-மார்-202019:43:31 IST Report Abuse
E Mariappan திருமணம் கோவில் திருவிழா தினசரி கோவில் தரிசனம் போன்றவை நிறுத்த வேண்டும் என்று அரசாங்கம் அறிவிக்கும் போது சட்டசபையில் எம்எல்ஏக்கள் மற்றும் பணியாளர்கள் என்று 500 பேர் வரை ஏசி அறையில் கூடலாமா? ஒரு மீட்டர் social distance சாத்தியமா? எப்படி ஆளுங்கட்சி எது செய்தாலும் எல்லாவற்றையும் திமுகவினர் தவறு என்று கூறுகிறார்களோ அதேபோல சட்டசபை கூட்டம் ஒத்திவைப்பு விஷயத்தில் தினமலர் வாசகர்களின் பெரும்பாலோர் கருத்து தவறு என்பது என் கருத்து
Rate this:
Share this comment
Cancel
Venramani Iyer - chennai,இந்தியா
21-மார்-202019:23:29 IST Report Abuse
Venramani Iyer நிச்சயமாக இடப்படியார் நல்ல முடிவை மனதார பாராட்டுகிறோம். உங்கள் கூற்றை நாங்கள் ஆதரிக்கிறோம்
Rate this:
Share this comment
Cancel
21-மார்-202015:37:15 IST Report Abuse
R. SUBRAMANIAN ஐயா,திரு ராமசாமி அவர்களே, நீங்களே மாமன்றத்தில் 60 வயதை கடந்தவர்கள், அறுவை சிகிச்சை பெற்றவர்கள் என்று சில மாண்புமிகு உறுப்பினர்களின் பெயரை குறிப்பிட்டுள்ளீர்கள். என் வினா இதுதான்:எதற்கு இவர்கள் பணத்தை செலவழித்துக்கொண்டு தேர்தலில் நின்று நியாய-அநியாய முறையில் வெற்றி பெற்று பதவி சுகம் காண் வருகிறார்கள்?பேசாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தால் என்ன? இதனால் தான் இந்தியர் ரஜனிகாந்த் அவர்கள் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் தேர்தலில் நிற்க வேண்டும் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லையே. இது எல்லா அரசியல்வாதிகளுக்கும் சாலப் பொருந்தும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X