உலகம் முழுவதும் 10 ஆயிரத்தை தாண்டியது 'கொரோனா' பலி

Updated : மார் 22, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Corona, Death, கொரோனா,10 ஆயிரம், பலி , பாதிப்பு, தடுப்பு_நடவடிக்கை, ஆர்டமிஸ்

பாரிஸ் : உலகம் முழுவதும், 'கொரோனா' வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, 10 ஆயிரத்து 448 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து, 55 ஆயிரத்து, 143 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 90 ஆயிரம் பேர், சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

சீனாவின் ஹுபய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் பரவத்துவங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி, பெரும் அச்சுறுத்தலாக உருவாகி உள்ளது.
இந்த வைரஸ் தொற்றுக்கு, ஆசியாவில் 3,431 பேரும், ஐரோப்பாவில், 5,168 பேரும் பலியாகி உள்ளனர். ஐரோப்பாவில், கடந்த 24 மணி நேரத்தில், 1,034 பேருக்கு, தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த கண்டம் முழுவதும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், அதிகபட்சமாக, அண்டை நாடான, சீனாவில், 3,248 பேரும், ஐரோப்பிய நாடான இத்தாலியில், 3,405 பேரும் உயிரிழந்தனர். இதற்கு அடுத்தபடியாக, மேற்காசிய நாடான, ஈரானில், 1,433 பேரை, இந்த தொற்று பலி வாங்கியது.
உலகம் முழுவதும், 2 லட்சத்து 55 ஆயிரத்து, 143 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 405 பேர் பலியாகி உள்ளனர்.



ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், கடந்த 24 மணி நேரத்தில், 235 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், ஸ்பெயினில் பலியானோர் எண்ணிக்கை, 1,002 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 20 ஆயிரம் பேருக்கு, வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், தலைநகர் மாட்ரிட்டில் மட்டும், ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஈரானில், நேற்று 149 பேர் பலியாகினர். இதுவரை, 1,433 பேர் பலியாகி உள்ள இந்த நாட்டில், 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.


மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், 274 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, உள்ளூர் விமானங்கள், ரயில்கள், பஸ்கள், டாக்சிக்கள், இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
அண்டை நாடான பாகிஸ்தானில், 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 77 வயதான புற்று நோயாளி ஒருவர், கொரோனா பாதிப்பால், நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, பாக்.,கில் பலி எண்ணிக்கை, மூன்றாக உயர்ந்தது.
வெறும், 1.4 கோடி மக்கள் தொகை கொண்ட, ஐரோப்பிய நாடான, பெல்ஜியத்தில், 2,257 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை, 37 ஆக உயர்ந்துள்ளது.


பிரிட்டனில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,269 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை, 144 ஆகவும் உள்ளது. அவசர நிலையை சமாளிப்பதற்காக, சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற, 65 ஆயிரம் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை, உடனடியாக பணியில் சேருமாறு, அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், 40 பேருக்கு, நேற்று தொற்று உறுதியானது. இதையடுத்து, 385 பேர், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



நிலவு திட்டம்: நிறுத்தியது 'நாசா'



நிலவுக்கு மனிதனை அனுப்பும் 'ஆர்டமிஸ்' எனும் திட்டத்தில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா' ஈடுபட்டுள்ளது. இதற்கான ராக்கெட் கட்டுமான பணிகள், நியூ ஆர்லியன்சில் நடந்து வந்தது. கொரோனா அச்சம் காரணமாக, இந்தப் பணி, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக, நாசா நேற்று அறிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
21-மார்-202010:04:40 IST Report Abuse
அசோக்ராஜ் ஆ ... பொல்லாத பலிதானக் கணக்கு. நம்ம நாட்டு சாலை விபத்துல ஒரு மாசக் கணக்கு இது. கள்ள சாராயத்துல ஒரு வருசக் கணக்கு. கூட்ட நெரிசலிலே ஆறுமாசக் கணக்கு. தீவிரவாத பலிதானத்துல ஒன்பது மாசக் கணக்கு. இதுதவிர புயல், வெள்ளம், வெய்யில், டெங்கு, டீபீ, கொலை, தற்கொலை, ஆணவக்கொலை எல்லாம் கணக்கெடுத்தா இந்தக் கொரோனா ஒரு ஜுஜுபி. ஏன் இவ்ளோ ஆர்ப்பாட்டம்?
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
21-மார்-202008:30:53 IST Report Abuse
blocked user குறிப்பாக இத்தாலியை புரட்டிப்போட்டு விட்டது.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
21-மார்-202008:15:25 IST Report Abuse
RajanRajan இது சைனாவை தவிர்த்து உள்ள உயிர் பலி. அங்கு எத்தனை உயிர் இழப்பு என்பது வெளி உலகுக்கு தெரியாதே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X