கவிதையை சுவாசமாக உணர்கிறேன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கவிதையை சுவாசமாக உணர்கிறேன்'

Added : மார் 20, 2020
Share
 'கவிதையை சுவாசமாக உணர்கிறேன்'

''கள்ளிப்பால் சிசுக்கொலைகள்காதுகளை எட்டிய காலங்களில்கள்ளிச்செடிகள் எல்லாம்கோரைப்பற்கள் தாங்கியஅரக்கர்களாகவேஎன் கண்களுக்கு தென்பட்டன...!''- என்ற கவிஞர் வானதி சந்திரசேகரனின் இக்கவிதை வரிகளில், ஒரு தாயின் தீராத வலியும், விம்மல் ஒலியும் வெளிப்படுகிறது.தென்மாவட்டங்களில் நடந்த பெண் சிசுக்கொலைகளுக்கு கள்ளிப்பாலும், நெல்மணிகளும் கொலைக்கருவியாக பயன்பட்டன என்பதை நாம் எளிதில் மறந்து விட முடியாது. அச்சமூக அவலத்தின் துயரக்கண்ணீரே இக்கவிதை.கோவை, பீளமேடு, லட்சுமிபுரம் பகுதியில் வசிக்கிறார் கவிஞர் வானதி சந்திரசேகரன். தமிழ் இலக்கியம் மீதுள்ள தீராத ஆர்வத்தால், கவிதை எழுதி வருகிறார். இதுவரை மூன்று கவிதை தொகுப்புகளை வெளியிட்டு இருக்கிறார். இயற்கையும், பெண்ணியமும் இவரது படைப்புகளில் அடித்தளமாக உள்ளன.அவரை சந்தித்தபோது...கல்லுாரியில் படிக்கும் காலத்தில் வாசித்த கதை, கவிதை புத்தகங்களே என்னை எழுத துாண்டியது. நான் எழுதியிருந்த கவிதைகளை தோழிகள், நண்பர்கள் வாசித்து பாராட்டியபோது, இன்னும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது.திருமணமானதும், எனது கணவர் இலக்கிய ரசிகராக இருந்தது என் அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும். அவரே என் கவிதைகளை தேர்ந்தெடுத்து, புத்தகமாக கொண்டு வந்தார். இம்மூன்று நுால்களும், அவர் தந்த உற்சாகத்தில் வெளி வந்தவையே. கவிதையை சுவாசமாக உணர்கிறேன். நல்ல படைப்புகளை தர வேண்டும் என்பதே என் லட்சியம், என, மகிழ்ந்து கூறும் இக்கவிதாயினி, அடுத்த கவிதை நுாலை தொகுத்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X