அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாளை பஸ்கள், ரயில்கள் ஓடாது: அரசு அறிவிப்பு

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (4+ 29)
Share
Advertisement
Corona, கொரோனா, பஸ், ரயில், 144, தடை, உத்தரவு, முதல்வர், ஒத்துழைப்பு,வேண்டுகோள்

சென்னை : 'தமிழகத்தில், நாளை பஸ்கள் இயங்காது. அரசு எடுத்து வரும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என, முதல்வர், இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேநேரத்தில், 'நாளை பயணியர் ரயில்கள் எதுவும் இயக்கப்படாது' என, ரயில்வேயும் அறிவித்துஉள்ளது. தமிழக முதல்வர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

* கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க, பிரதமர் உத்தரவிட்டுள்ளார். அவர், ஒன்பது அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்; அவற்றை பின்பற்ற வேண்டும்.

* நாளை காலை, 7:00 முதல், இரவு, 9:00 மணி வரை, பொதுமக்கள் தாமாகவே முன்வந்து, ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும்.

* கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள, டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், ராணுவம், விமான நிலையம் மற்றும் பிற துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 22ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, மணியோசை வழியாகவும், கை தட்டியும், நன்றி தெரிவிக்க வேண்டும்.

* நாளை காலை, 7:00 முதல், இரவு, 9:00 மணி வரை, போக்குவரத்து கழகங்களின் பஸ்கள், தனியார் பஸ்கள் மற்றும் சிற்றுந்துகள் எதுவும் இயங்காது. மெட்ரோ ரயில்களும் இயங்காது.

* அனைத்து அரசு மற்றும் தனியார் நுாலகங்கள், இன்று முதல், 31ம் தேதி வரை மூடப்படும்.

* பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க, அரசு எடுத்து வரும், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து, கொரோனா வைரஸ் நோயை, வெற்றிகரமாக ஒழிக்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது:பொது ஊரடங்கை முன்னிட்டு, இன்று நள்ளிரவிலிருந்து, நாளை இரவு, 10:00 மணி வரை, பயணிகள் ரயில்கள் எதுவும் இயக்கப்படாது. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும், நாளை அதிகாலை, 4:00 மணியிலிருந்து இயக்கப்படாது. புறநகர் ரயில்கள் மிக குறைவாகவே இயக்கப்படும்.

இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின. இதுதவிர, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும், 245 ரயில்களும், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (4+ 29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
21-மார்-202010:52:08 IST Report Abuse
Thiagarajan Kodandaraman பஸ்ஸுகள் ரயில்கள் ஆகிய நிறுத்தங்கள் மூலம் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தலாம்
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
21-மார்-202008:37:16 IST Report Abuse
blocked user ஏப்ரல் வந்துவிட்டால் சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள்... நல்லதுதான்..
Rate this:
Share this comment
Cancel
அன்பு - தஞ்சை,இந்தியா
21-மார்-202001:44:15 IST Report Abuse
அன்பு வைரஸ் ஒரு நாள் அடையாள போராட்டத்தை கண்டெல்லாம் பயப்படாது. ஆண்டவன் புண்ணியத்தால், இந்தியாவில் நாற்பது டிகிரிக்கு மேல் வெப்பம் தகிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X