பொது செய்தி

தமிழ்நாடு

சிந்தனை 'மாறினால்'

Added : மார் 20, 2020
Share
Advertisement
ஐ ந்து குழந்தைகளுக்கும் நல்வாழ்க்கை அமைத்துக் கொடுத்து விட்டோம் என்கிற நிம்மதியே சரஸ்வதி பாட்டிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.முப்பது வயதிலேயே, தனது கணவரை இழந்து, தனிஆளாக இச்சமுதாயத்தில் போராடி, மூன்று பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகளை வளர்த்து, ஆளாக்கியது முதல், அவர்களது கல்வி, வேலை, திருமணம், பேரக்குழந்தைகள் வரை, மறக்க முடியாத நிகழ்வுகளை மகிழ்ச்சியாகவும்,
 சிந்தனை 'மாறினால்'

ஐ ந்து குழந்தைகளுக்கும் நல்வாழ்க்கை அமைத்துக் கொடுத்து விட்டோம் என்கிற நிம்மதியே சரஸ்வதி பாட்டிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.முப்பது வயதிலேயே, தனது கணவரை இழந்து, தனிஆளாக இச்சமுதாயத்தில் போராடி, மூன்று பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகளை வளர்த்து, ஆளாக்கியது முதல், அவர்களது கல்வி, வேலை, திருமணம், பேரக்குழந்தைகள் வரை, மறக்க முடியாத நிகழ்வுகளை மகிழ்ச்சியாகவும், கர்வமாகவும், மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டே இருப்பார்.
அவருக்கு இப்போது எண்பது வயதாகி விட்டது. முகத்தில் கோடுகள் தெரிந்தாலும், அவரது மனசும் உற்சாகமும் அனைவரையும் சரஸ்வதி பாட்டியின் அன்புக்கு அடிமையாக்கியிருந்தது. ஆனால், அவரே, குடும்பத்தின் அமைதியின்மைக்கும் காரணமாகும் நிகழ்வு நடக்க ஆரம்பித்தது.திடீரென சரஸ்வதி பாட்டியின் நடவடிக்கைகள் மாறத்துவங்கின. தேவையற்ற சந்தேக உணர்வு களால் நிம்மதியிழந்தார். 'யாரோ தன்னை கண்காணிப்பதாகவும், சிலர் தாக்க முயற்சிப்பதாகவும்' மகன்களிடம் கூறினார். எப்போதும் பயம் கலந்த பதற்றடத்துடனே காணப்பட்டார். சில நாட்களில், குடும்பத்தினரிடம் பேசுவதை தவிர்த்து, தனிமை அறையில் தன்னை அடைத்துக்கொண்டார்.நாளுக்கு நாள் சரஸ்வதி பாட்டியின் பிரச்னை தீவிரமாகியது. விஷம் கலந்த உணவை மருமகள்கள் வழங்குகிறார்கள்; மகன்கள் தன்னை கொல்ல முயற்சிப்பதாக கூச்சலிட்டார். துாங்கினால் ஏதேனும் செய்து விடுவார்கள் என்றெண்ணி, இரவு நேரங்களில் துாங்குவதை தவிர்த்தார்.
துாக்கமின்மை மற்றும் உணவு உண்ணாததால், பாட்டி உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. மனநல பிரச்னையால் பாதிக்கப்பட்டியிருக்கிறார் என கருதி, கோவை - திருச்சி ரோடு, ராஜா நகரில் உள்ள, நவீன் மருத்துவமனையில் மனநல மருத்துவர் ராஜேந்திரனை சந்தித்தனர்.
மருத்துவர் ராஜேந்திரன் கூறுகையில், ''முதல்கட்ட உரையாடலிலேயே, சரஸ்வதியின் மனநோய் அறிகுறி தீவிரமாக இருந்ததால், அமைதிப்படுத்த மருத்துவமனையில் அனுமதித்து, துாங்குவதற்கு அறிவுறுத்தினோம். அறையில் அவரை காணச் சென்றபோது, கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொண்டு, தன்னை கத்தியால் குத்திக் கொலை செய்ய சிலர், வெளியே காத்திருப்பதாக கூறினார். அவருக்கு. திரிபு எண்ணங்கள் எனும் மனநல பிரச்னை இருக்கக் கூடும் என எண்ணி, அதற்கான சிகிச்சையை துவக்கினோம்.
சிகிச்சையின்போது, பிரச்னை குறையாமல், மேலும் அதிகரித்தது. மூளையில் பாதிப்பு இருக்கக்கூடும் என, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்தோம். 'மெனிஞ்சியோமா' எனும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாத வகை கட்டி இருந்தது கண்டறியப்பட்டது. பல ஆண்டுகளாக இருந்த கட்டி, கல் போல் இறுகி இருந்தது.அதன் காரணமாக, மூளையில் ஏற்பட்ட அழுத்தத்தால், மனநோய் போன்ற அறிகுறி ஏற்படத் துவங்கியுள்ளது. கட்டியை எடுக்கும்போது, உயிருக்கு கேடாய் அமைய வாய்ப்பிருக்கிறது என, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆலோசனை வழங்கினார். அதனால், பாட்டியின் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு, மருந்துகள் மூலம், அவரின் மனநோய் அறி குறிகளை படிப்படியாக குறைத்தோம். மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிய அவர், மீண்டும் தனது வாழ்க்கை கதையை மற்றவர்களுடன் பகிர்ந்து வருகிறார்,'' என்றார்.
ராஜேந்திரன்மன நல மருத்துவர்நவீன் மனநல மருத்துவமனை98431 10237அதீத கோபம் வருதா?அதீத கோபம், பயம், பதற்றம், உணர்ச்சி மாற்றம், குழப்ப மனநிலை, சந்தேக உணர்வு இருந்தாலே, மனரீதியான பிரச்னை என, பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அனைத்து நோய்களும், மனநோயாக இருப்பதில்லை. மனநோய் அறிகுறியுடன், தலைவலி, வலிப்பு, வாந்தி போன்ற அறிகுறி இருந்தால், மூளையில் ஏற்படும் பிரச்னையாக இருக்க வாய்ப்புள்ளது.
மூளையில் கட்டி, விபத்துகளில் தலையில் அடிபடுதல் போன்றவற்றாலும், மனநோய் போன்ற அறிகுறி ஏற்படும். 60 முதல், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், முதன்முதலாக, மனநோயால் பாதிக்கப்படும்போது, மூளைநரம்பியல் பிரச்னையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்கிறார், டாக்டர் ராஜேந்திரன்.சிந்தனை கோளாறுதிரிபு எண்ணங்கள் என்பது சிந்தனை கோளாறுகளில் ஒருவகை.
இதில், பாதிக்கப்பட்டவர்கள் அடிப்படை காரணங்கள் ஏதுமின்றி சந்தேகப்படுவர். உண்மையில்லை என விளக்கினாலும், அதை உறுதியாக நம்புவார்கள். காரணமற்ற கற்பனை எண்ணங்கள், போலி நம்பிக்கைகளால் மிகுந்த மனநல பாதிப்புக்குள்ளாவார்கள். தனக்கு யாரோ கெடுதல் செய்வதுபோல் சந்தேகம், யாரோ தொடர்ந்து வருவது மற்றும் தன்னை கொல்ல முயற்சிகள் நடப்பதுபோல் நம்புவார்கள் என்கிறார் டாக்டர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X