பொது செய்தி

தமிழ்நாடு

இனிப்பும்... கசப்பும்...

Added : மார் 20, 2020
Share
Advertisement
 இனிப்பும்... கசப்பும்...

''இ ன்ஜினியரிங் படித்த பலரும் செக்யூரிட்டி வேலை பார்க்கின்றனர். தமிழ் படித்த எனக்கு என்ன வேலை கிடைத்து விடப் போகிறது,'' எனும், எம்.ஏ., பட்டதாரியான தங்கையா, மனம் தளராமல், டீ வியாபாரம் செய்து, குடும்பத்தைகாப்பாற்றுகிறார்.கோவை, புலியகுளம், பெரியார் நகர் பகுதியில் வசிப்பவர் தங்கையா. எம்.ஏ., தமிழ் இலக்கியம் படித்தவர். தினமும் இரு சக்கர வாகனத்தில், டீ வியாபாரம் செய்கிறார். இதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில், நம்பிக்கையோடு வாழ்க்கை சக்கரத்தை சுழற்றுகிறார்.அவருடன் பேசியபோது...உங்களுக்கு சொந்த ஊர் எது?திண்டுக்கல் மாவட்டம், நத்தம் புதுப்பட்டி. கோவைக்கு வந்து, 14 வருஷமாச்சு. அப்போதிருந்து, டீ வியாபாரம்தான் செய்கிறேன்.எம்.ஏ., வரை படித்த நீங்க, வேற வேலைக்கு முயற்சி செய்யலையா?எங்கள் வீட்டில், நான் தான் முதல் பட்டதாரி. காலேஜ் முடிச்சிட்டு, கவர்மென்ட் வேலைக்கு செல்லும் கனவோடு இருந்தேன். வேலைக்கு பல வழிகளில் முயற்சி செய்தேன்; கிடைக்கலை. பி.எட்., படித்து தமிழ் ஆசிரியராக ஆசை இருந்தது. படிக்க வசதி இல்லாததால், அதையும் விட்டுட்டேன்.ஏன், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதி இருக்கலாமே?தேர்வு எழுதினால் மட்டும் வேலை கிடைச்சிடுமா, சார். டி.என்.பி.எஸ்.சி., இன்றைக்கு என்ன நிலைமையில் இருக்கிறது என, உங்களுக்கு தெரியாதா? படித்தால் மட்டும் போதாது, சார், பை நிறைய பணமும் இருக்கணும்.இந்த வியாபாரம் பரவாயில்லையா?வீட்டில் டீ, வடை, போண்டா தயார் செய்து, காலை, 9:00 மணிக்கு லைனுக்கு கிளம்புவேன். ரெகுலராக டீ கொடுக்கும் ஆபீஸ், கம்பெனிகளுக்கு கொடுப்பேன். பில்டிங் வேலை நடக்கும் இடங்களுக்கு போய் டீ கொடுப்பேன். முதல் ரவுண்டு முடிச்சிட்டு, மதியம், 1:00 மணிக்கு வீட்டுக்கு வந்துடுவேன். மறுபடியும், மாலை, 3:00 மணிக்கு அதே இடங்களுக்கு போய் டீ, பலகாரம் கொடுப்பேன். ரெகுலர் கஸ்டமர்கள் இருப்பதால், வாழ்க்கை ஓடுது. தினமும், 3,000 ரூபாய் முதலீடு போட்டால், 600 ரூபாய் லாபம் கிடைக்கும்.குடும்பம் குழந்தைகள் பற்றி...இரண்டு குழந்தைகள். மகள் எட்டாம் வகுப்பு, மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்கள். மனைவி வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்துக்கிறாங்க. கிடைக்கும் வருமானத்தை வைத்து, வாழ்க்கையை வாழ்கிறோம். இன்ஜி., படித்த பலர் செக்யூரிட்டி வேலை பார்க்கின்றனர். தமிழ் படித்த எனக்கு என்ன வேலை கிடைக்கப்போகிறது. நான் விற்கும் தேனீர் இனிக்கிறது; வாழ்க்கை கசக்கிறது. என்ன செய்வது?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X