மணல் கொள்ளையை தவிர்க்க தைல மரம் வளர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மணல் கொள்ளையை தவிர்க்க தைல மரம் வளர்ப்பு

Added : மார் 20, 2020
Share
 மணல் கொள்ளையை தவிர்க்க தைல மரம் வளர்ப்பு

மீஞ்சூர்: கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில், மணல் கொள்ளையர்களிடம் இருந்து தங்களது நிலங்களை பாதுகாக்க, அதன் உரிமையாளர்கள் தைல மரங்களை வளர்த்து வருகின்றனர்.

காளஞ்சிமீஞ்சூர் அடுத்த, காட்டுப்பள்ளி, காளஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கடற்கரை பகுதிகளில் இருந்து மணல் அள்ளப்படுகிறது. அரசு மற்றும் தனியார் நிலங்களில் இந்த மணல் கொள்ளை நடைபெறுகிறது.கடற்கரையை ஒட்டிஉள்ள பகுதிகளில், தனியார் நிலங்கள் உள்ளன.நிலத்தடி நீர் உவர்ப்பால் அப்பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால், நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை பயன்பாடு இன்றி வைத்திருந்தனர்.தவிப்புமேற்கண்ட பயன்பாடு இன்றி கிடக்கும் தனியார் நிலங்களை குறிவைத்து, இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெறுகிறது.நில உரிமையாளர்கள் வெளியூர்வாசிகளாக இருப்பதால், அவர்களது நிலங்களில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க முடியாமல் தவித்தனர்.இந்நிலையில், தற்போது, தனியார் நில உரிமையாளர்கள், தங்களது நிலங்களில் தைல மரங்களை வளர்த்து வருகின்றனர். ஆர்வம்உவர்ப்பு நீர்பகுதிகளிலும், இவை வளரக்கூடியது என்பதால், இதனை வளர்த்து வருகின்றனர்.மணல் கொள்ளையர்களிடம் தங்களது நிலங்களை பாதுகாக்கவும், அதேசமயம், வீணாக கிடக்கும் நிலங்கள் மூலம் வருவாய் பெறவும், இந்த நடவடிக்கை எடுத்து உள்ளதாக நில உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.வறண்ட பகுதிகளிலும், இவை வளரும் தன்மை உடையதால், இதை வளர்ப்பதில், நில உரிமையாளர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X