கொரோனா : கோவை ரயில்கள் ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' : கோவை ரயில்கள் ரத்து

Added : மார் 20, 2020
Share
கோவை ரயில்கள் ரத்து'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க, கோவை - எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்(12243/44) வரும், 30ம் தேதி வரை (24ம் தேதி தவிர) ரத்து செய்யப்படுகிறது.அதேபோல், திருவனந்தபுரம் - எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்(12698) வரும், 21, 28ம் தேதிகளிலும், எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்(12697) வரும், 22, 29ம் தேதிகளிலும் ரத்து

கோவை ரயில்கள் ரத்து'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க, கோவை - எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்(12243/44) வரும், 30ம் தேதி வரை (24ம் தேதி தவிர) ரத்து செய்யப்படுகிறது.அதேபோல், திருவனந்தபுரம் - எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்(12698) வரும், 21, 28ம் தேதிகளிலும், எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்(12697) வரும், 22, 29ம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.
கோவை - மங்களூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்(22610), ஏப்., 1ம் தேதி வரையும், மங்களூர் - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்(22609) வரும், 31ம் தேதி வரையும் ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மூட்டையை கட்டுங்கபள்ளி, கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பல்கலைகளும் இயங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விழாக்கள் நடத்தவும் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கல்லுாரி சுற்றுலாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதி மாணவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை கல்லுாரிகளில் படித்து வரும் வெளிமாநில, மாவட்ட மாணவர்கள் சொந்த ஊர் செல்ல துவங்கியுள்ளனர். 'குழந்தையோடு வராதீங்க'கோவை நீதிமன்ற வளாகத்துக்குள் வர வேண்டாம் என உத்தரவு போட்டிருந்தாலும், காலை நேரத்தில் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது.
மாவட்ட நீதிபதி சக்திவேல், நீதிமன்ற வளாகம் முழுவதும் நேற்று ஆய்வு செய்தார். ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்களிடம், 'தேவையின்றி கூட்டமாக நிற்காதீர்கள்; 'சிசி டிவி' கேமராவை, ஐகோர்ட்டில் கண்காணிக்கின்றனர். தயவு செய்து புறப்பட்டுச் செல்லுங்கள்' என, அன்பு கட்டளையிட்டார். குழந்தையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை அழைத்த நீதிபதி, 'குழந்தையுடன் இங்கே எதற்காக வந்தீர்கள்' எனக்கேட்டார்.
கோர்ட் போஸ்ட் ஆபீசில், 'இன்லேன்ட் கவர்' வாங்க வந்ததாக, அவர் தெரிவித்தார். அதற்கு, 'குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே வராதீர்கள். உடனடியாக வீட்டுக்கு கிளம்புங்கள்' என அறிவுறுத்திய நீதிபதி, உணவு இடைவேளைக்காக அடைக்கப்பட்டிருந்த போஸ்ட் ஆபிசை திறந்து, கவர் வழங்க அறிவுறுத்தினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X