பொது செய்தி

தமிழ்நாடு

ரஷ்ய நாட்டு பயணியருக்கு திருவள்ளூரில் சோதனை

Added : மார் 20, 2020
Share
Advertisement
 ரஷ்ய நாட்டு பயணியருக்கு திருவள்ளூரில் சோதனை

திருவள்ளூர்: திருவள்ளூர் வந்த ரஷ்ய பயணியருக்கு, 'கொரோனா' வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு, ரஷ்ய நாட்டில் இருந்து பிரிந்து சென்ற, கிர்கிஸ்தானைச் சேர்ந்த, 13 இஸ்லாமியர்கள், நேற்று முன்தினம் வந்தனர்.தகவல் அறிந்த ரயில்வே காவல் துறையினர், உடனடியாக, திருவள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.டி.எஸ்.பி., கங்காதரன் தலைமையில், போலீசார் வந்து, அவர்களை, தனியாக ஓர் அறையில் அமர வைத்தனர். பின், மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்று குறித்து பரிசோதித்தனர்.இதில் சளி, இருமல், மற்றும் காய்ச்சல் போன்ற எந்த அறிகுறியும் இல்லை என, மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து, அவர்களை அங்கிருந்து, போலீசார் அனுப்பினர். இதனால், நேற்று முன்தினம், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X