கூலி இல்லாமல், சுமைப்பணி தொழிலாளர் தவிப்பு

Added : மார் 20, 2020
Share
Advertisement

திருப்பூர்:கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிமாநிலம் - திருப்பூர் இடையேயான சரக்கு ரயில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், சுமைப்பணி தொழிலாளர்கள் வேலையிழந்து பரிதவிக்கின்றனர்.ம.பி., உ.பி., கர்நாடகா, மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கோழித்தீவனம், மக்காசோளம், சோளம், அவ்வப்போது அரிசி சரக்கு ரயில்களில் இங்கு வந்திறங்குகிறது. ஒரு சரக்கு ரயில் வந்ததில் இருந்து, 48 மணி நேரத்தில், 'வேகனில்' இருக்கும் சரக்குகள் இறக்கப்பட்டு, கூட்ஸ்ெஷட் டிராக்கில் இருந்து சரக்கு ரயில் அனுப்பப்படுகிறது.குஜராத், சூரத், லுாதியானா, மும்பைக்கு அதிகளவில் சரக்குகள் திருப்பூரில் இருந்து அனுப்பப்பட்டதால், பிரத்யேக கூட்ஸ்ெஷட் டிராக்கை தெற்கு ரயில்வே அமைத்துக் கொடுத்தது. ரயிலில் சரக்கு ஏற்றி, இறக்கும் பணியில், 400க்கும் அதிகமாக சுமைப்பணி தொழிலாளர்கள் உள்ளனர். இச்சூழலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சரக்கு அனுப்புவது வெகுவாக குறைந்துள்ளது.ரயில்வேயும் புக்கிங்கை குறைத்துள்ளது. வடமாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு இம்மாதம், 11 ம் தேதிக்கு பின் சரக்கு ரயில் வரவில்லை. கோழித்தீவனம் மட்டுமின்றி, பிற பொருட்கள் வருவதும் அடியோடு தடைபட்டுள்ளதால், சுமை பணி தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.அவர்கள் கூறுகையில், 'ரயில் வந்தால் பிசியாக இருப்போம். அதிகாலை முதலே பணியை சுறுசுறுப்பாக துவக்குவோம். வெளியிடங்களில் இருந்து வேலைக்கு வந்து செல்லும் நிறைய பேர் சரக்கு ரயில் இன்று வந்து இருக்கும் என நம்பி வந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். தினமும் சாப்பிட்டு விட்டு உறங்கி கொண்டிருக்கிறோம். ரயில் வந்தாலே எங்களுக்கு சம்பளம். இல்லையேல், கூலிக்கு வழியில்லை,' என, புலம்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X