பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோன சில வரிகளில்...

Added : மார் 20, 2020
Share
Advertisement
 'கொரோன சில வரிகளில்...

l திருத்தணியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத சென்ற பிளஸ் 2 மாணவர்கள், கிருமிநாசினியால், ஒரு நிமிடம் கைகளை கழுவிய பின்னரே, தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்l தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, உயர்கல்வித் துறை, தேசிய மாணவர் படை மற்றும் பொன்னேரி சுப்ரமணிய ஆசான் சிலம்பகூட மாணவர்கள், இரு தினங்களாக, திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில், கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, சுத்தம் மற்றும் சுகாதாரமாக இருப்பது குறித்து, நாடகம், பாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.l திருத்தணி முருகன் கோவில் உட்பட, அதன் உபகோவில்கள், 29 என, மொத்தம், 30 கோவில்கள்; திருவள்ளூர் வீரராகவர் மற்றும் தீர்த்தீஸ்வரர் கோவில்கள்; சித்துார் மாவட்டம், நகரி, புத்துார் பகுதிகளில், ஐந்து கோவில்கள், நேற்று முதல் மூடப்பட்டனl சித்துார் மாவட்டம், நகரி டவுனில் அமைந்துள்ள கரகண்டீஸ்வரர் கோவிலில், காமாட்சி அம்மன் சன்னிதியில், ஒரு யாகசாலை அமைத்து, தன்வந்திரி ஹோமம் நடத்தப்பட்டது. 5 மணி நேரம், தொடர்ந்து ஹோமம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டனl சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் மற்றும் பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 'பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும்; பக்தர்களுக்கு அனுமதி இல்லை' என, தெரிவித்ததுl கடம்பத்துார் ஒன்றியம், வயலுார் ஊராட்சியில், வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. 100 நாள் திட்ட தொழிலாளர்கள் உட்பட வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்கோவில், பஸ் நிறுத்தம், ஊராட்சி அலுவலகம் உட்பட, பல இடங்களில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கெரோனா வைரஸ் குறித்து ஆட்டோ மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X