போலீஸ் டைரி

Added : மார் 20, 2020
Share
Advertisement

அரசு ஊழியர்கள் மீது தாக்குகனகம்மாசத்திரம்: கனகம்மாசத்திரம் அடுத்த, ராமஞ்சேரி காலனியில், மின் கம்பங்களை நட்டு, உயர் மின்னழுத்த கம்பிகள் இணைக்கும் பணியில், பொறியாளர் ரஞ்சித் தலைமையில், ஊழியர்கள் வினோத்குமார், நவாஸ் அகமது ஆகியோர், நேற்று ஈடுபட்டனர்.அதே பகுதியைச் சேர்ந்த செந்தில், செந்தமிழ் செல்வன், சபரி, வெங்கடேசன், பாஷா, முருகன் என, ஆறு பேர், மின் கம்பம் நட எதிர்ப்பு தெரிவித்து, தகராறு செய்தனர். பின், இரும்பு கம்பியால், ரஞ்சித், நாவஸ் அகமது ஆகியோரை தாக்கினர். படுகாயமடைந்த இருவரும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேற்கண்ட ஆறு பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.பிஸ்கட் குடோனில் பணம் திருட்டுதிருத்தணி: திருத்தணி, ஆலமரம் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத், 48; தன் வீட்டின் முன், கிடங்கு அமைத்துள்ளார்.பிஸ்கட் மற்றும் மில்க்சேக் ஆகிய பொருட்களை மொத்தமாக வாங்கி, அதை, கிடங்கில் வைத்து, திருத்தணி நகர கடைகளுக்கு வினியோகித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கிடங்கை பூட்டி சென்றவர், நேற்று காலை திறக்க வந்தார்.அப்போது கிடங்கின், 'ஷட்டர்' திறக்கப்பட்டு, கல்லாவில் இருந்த, 3 லட்சம் ரூபாய் திருடுபோனது தெரிந்தது. திருத்தணி போலீசார் வந்து, கிடங்கில் இருந்த கண்காணிப்பு கேமராவை சோதித்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை, தேடி வருகின்றனர்.நீரில் மூழ்கி வாலிபர் மரணம்திருப்பதி: ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் உள்ள வரதய்யபாளையம் நீர்வீழ்ச்சியில் குளிக்க, பொன்னேரி அருகில் உள்ள அருமந்த கிராமத்தைச் சேர்ந்த கவுதம் என்ற வாலிபர், நண்பர்களுடன் புறப்பட்டார்.வழியில், மிட்டய்யபாளையம் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க முடிவெடுத்து, அனைவரும் குளித்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக, நீரில் மூழ்கி, கவுதம் இறந்தார். சத்யவேடு போலீசார் விசாரிக்கின்றனர்.மணல் கடத்தியவர் கைதுதிருத்தணி: திருத்தணி- - அரக்கோணம் சாலை, வள்ளியம்மாபுரம் பஸ் நிறுத்தம் அருகே, திருத்தணி போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த பதிவெண் இல்லாத டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டதில், மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், அதன் ஓட்டுனர் லட்சுமணன், 30, என்பவரை கைது செய்தனர். கணவன் மாயம்: மனைவி புகார்மணவாள நகர்: திருவள்ளூர் அடுத்த, மணவாள நகரைச் சேர்ந்தவர் நரசிம்மன், 47. இவரது மனைவி கவிதா, 40.தினமும் மது குடித்து, வீட்டுக்கு வரும் நரசிம்மனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.கடந்த, 14ம் தேதி, மனைவியிடம், தன் நண்பர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நரசிம்மன், வீடு திரும்பவில்லை. கவிதா புகாரை, மணவாள நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X