பொது செய்தி

தமிழ்நாடு

தடையை மீறி நடந்த வாரச்சந்தை

Added : மார் 20, 2020
Share
Advertisement

கும்மிடிப்பூண்டி: கொரோனா நோய் தொற்று குறித்து, விழிப்புணர்வு இல்லாததால், தடையை மீறி நடந்த பெத்திக்குப்பம் வாரச்சந்தையில், ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த, பெத்திக்குப்பம் பகுதியில், ரயில்வே கேட் அருகே உள்ள மைதானத்தில், வெள்ளிக்கிழமைகளில், வாரச்சந்தை நடப்பது வழக்கம்.சந்தையில், குறைந்த விலையில், காய்கறிகள் விற்கப்படும் என்பதால், இலங்கை அகதிகள் மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் என, ஆயிரக்கணக்கானோர் கூடுவர்.தற்போது, கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, மக்கள் அதிகம் கூடும் திரையரங்கம், வணிக வளாகம் மற்றும் சந்தைக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது.இந்த நிலையில், தடையை மீறி, மேற்கண்ட இடத்தில், நேற்று நடந்த வாரச்சந்தையில், போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஆயிரக்கணக்கானோர் வந்தனர். அவர்களில், 90 சதவீதத்தினர் இலங்கை அகதிகள்.தடையை மீறி நடந்த சந்தையால், கொரோனா நோய் தொற்று எளிதில் பரவ கூடும் என, பொதுமக்கள் மத்தியில் அச்சம் கிளம்பியுள்ளது.கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாம் பகுதியில், கொரோனா நோய் தொற்று மீது, சுகாதார துறையினர் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இது போன்று, தடையை மீறி நடத்தப்படும் சந்தைகளை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X