வட்டியில்லா கடன் வழங்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வட்டியில்லா கடன் வழங்க வலியுறுத்தல்

Added : மார் 20, 2020
Share

திருப்பூர்:தொழில் துறையினருக்கு, வட்டியில்லா கடன் வழங்குமாறு, 'டீமா' தலைவர் வலியுறுத்தி உள்ளார்.திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா வைரஸ், உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால், திருப்பூர் பின்னலாடை துறை, உற்பத்தி பாதிப்பை சந்தித்து வருகிறது. ஆர்டர்கள் ரத்தாகின்றன.
தயாரித்த ஆடைகளை அனுப்பமுடியாமல் தேக்கமடைந்துள்ளன. வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருவது வரவேற்கத்தக்கது. இந்த இக்கட்டான சூழலை கருத்தில்கொண்டு, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு, பூஜ்ய சதவீத வட்டிக்கு வங்கி கடன் வழங்கவேண்டும்.ஜி.எஸ்.டி., வரி செலுத்த அவகாசம் வழங்கவேண்டும். பிற நாடுகள் போன்று, தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு, மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கவேண்டும். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X