பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் தரிசனம் ரத்து :தினசரி பூஜைகள் நடைபெறும்

Added : மார் 20, 2020
Share
Advertisement
 கோவில்களில் தரிசனம் ரத்து :தினசரி பூஜைகள் நடைபெறும்

திருப்பூர்:கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று காலை, 8:00 மணி முதல், இத்தகைய உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. வரும், 31ம் தேதி வரை இதே நிலை தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கம் போல் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள், ராஜகோபுரம் நடைவாசல் அருகே, தீபம் வைத்து, மலர்களை வைத்து, வழிபட்டு சென்றனர்.
இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் வெங்கடேஷிடம் கேட்டபோது, ''அரசு உத்தரவுப்படி, 31ம் தேதி வரை, பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோவில்கள் அனைத்திலும், வழக்கமான நித்தியபடி பூஜைகள் தொடர்ந்து நடக்கும். கூட்டம் சேர்வதை தவிர்க்க, பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பூஜைகள் முடிந்ததும், கோவிலை பூட்டி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X