புறவழிச்சாலையில் அரசு பஸ் நிற்காதது. ஏன்?.ஆம்னி நிறுவனத்திற்கு அதிகாரிகள் உடந்தை பாதிக்கப்படும் பயணியருக்கு தீர்வு எப்போது?| Dinamalar

தமிழ்நாடு

புறவழிச்சாலையில் அரசு பஸ் நிற்காதது. ஏன்?.ஆம்னி நிறுவனத்திற்கு அதிகாரிகள் உடந்தை பாதிக்கப்படும் பயணியருக்கு தீர்வு எப்போது?

Added : மார் 20, 2020
Share
செங்கல்பட்டு: செங்கல்பட்டு புறவழிச்சாலையில், அரசு பஸ்கள் நிற்காமல் செல்வதற்கு, தனியார் பஸ்களுக்கு உடந்தையாக, அரசு நிர்வாகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் பயணியருக்கு, எப்போது தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், மகேந்திரா வேர்ல்டு சிட்டி, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில், தொழிற்சாலைகள் நிறைய உள்ளன. தவிர, சென்னை
 புறவழிச்சாலையில் அரசு பஸ் நிற்காதது.  ஏன்?.ஆம்னி நிறுவனத்திற்கு அதிகாரிகள் உடந்தை பாதிக்கப்படும் பயணியருக்கு தீர்வு எப்போது?

செங்கல்பட்டு: செங்கல்பட்டு புறவழிச்சாலையில், அரசு பஸ்கள் நிற்காமல் செல்வதற்கு, தனியார் பஸ்களுக்கு உடந்தையாக, அரசு நிர்வாகம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்படும் பயணியருக்கு, எப்போது தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், மகேந்திரா வேர்ல்டு சிட்டி, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில், தொழிற்சாலைகள் நிறைய உள்ளன. தவிர, சென்னை அருகாமையில் சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் உட்பட, புறநகர் பகுதிகளும் உள்ளன.தொழிற்சாலைகளில், ஆயிரக்கணக்கான தென்மாவட்டத்தை சேர்ந்தோர் பணிபுரிகின்றனர்.

அவர்கள், புறநகர் பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். மனுஇத்தொழிலாளர்கள், வார இறுதி, பண்டிகை நாட்களில், தென் மாவட்டங்களான திருச்சி உள்ளிட்ட சொந்த ஊருக்கு செல்கின்றனர்.தவிர, அதே பகுதியைச் சேர்ந்தோரும், ஆன்மிக வழிபாடு உள்ளிட்டவைக்காக, மதுரை உட்பட பல பகுதிகளுக்கு சென்று திரும்புகின்றனர்.தங்களின் வசதிக்காக, செங்கல்பட்டு புறவழிச்சாலையில், அரசு விரைவு பஸ்களை நிறுத்த வேண்டும் என, பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை இல்லை.வேறு வழியின்றி, புறவழிச்சாலையிலிருந்து, 3 கி.மீ., தொலைவில் உள்ள, பரனுார் சுங்கச்சாவடிக்கு சென்று, பொதுமக்கள் பஸ் ஏறுகின்றனர்.இவ்வாறு செல்வதால், கால விரயமும், அலைச்சல் மற்றும் கூடுதல் பயணச்செலவும் ஆவதாக கூறி, செங்கல்பட்டு மாவட்ட, வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்கள் மனு அளித்தனர்.

மனுவை பெற்ற கலெக்டர் ஜான்லுாயிஸ், அதன் மீது நடவடிக்கை எடுக்க, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தார்.இதையடுத்து, 'அனைத்து அரசு பஸ்களும், செங்கல்பட்டு புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ், சர்வீஸ் சாலை வழியாக சென்று, பயணியரை இறக்கி, ஏற்றி செல்ல வேண்டும்' என-, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் மண்டல துணை மேலாளர் அர்ஜூனன் என்பவர், பிப்ரவரி, 25ம் தேதி உத்தரவிட்டார்.மேலும், 'அனைத்து போக்குவரத்து கிளை மேலாளர்கள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள், இந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும். புறவழிச்சாலையில், இரண்டு பரிசோதகர்கள், தினமும் கண்காணிக்க வேண்டும்' என, தெரிவித்தார்.இதையடுத்து, தென் மாவட்டத்திலிருந்து சென்னை செல்லும் அரசு பஸ்கள், புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ், சர்வீஸ் சாலை வழியாக பயணியரை ஏற்றி, இறக்கி செல்கின்றன.ஆனால், சென்னையில்இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், மேற்கண்ட பகுதியில் நிற்பதில்லை.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பெரும்பாலான பயணியர், அரசு பஸ்சில் குறைவான கட்டணத்தில், பயணம் செய்ததால், தனியார் ஆம்னி பஸ்களை அவர்கள் புறக்கணித்தனர்.செங்கல்பட்டு புறவழிச்சாலையில், பணிபுரியும் பரிசோதகர், இப்பகுதிகளில் இயங்கும், தனியார் ஆம்னி பஸ் நிர்வாகத்தினரிடம், 'கப்பம்' பெற்று, அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

அறிவுறுத்தல்

இதனால், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் பஸ்கள், புறவழிச்சாலையில் நிற்பதில்லை.பயணி யர் நலன் கருதி, போக்கு வரத்து அதிகாரி உத்தரவிட்டதை, பரிசோதகர் நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் வலியுறுத்துகின்றனர்.பஸ் நிறுத்தப்படாதது குறித்து, துணை மேலாளர் அர்ஜூனன் கூறுகையில், ''தனியார் ஆம்னி பஸ்களுக்கு ஆதரவாக, யாரும் செயல்படவில்லை. அனைத்து பஸ்களும், செங்கல்பட்டு புறவழிச்சாலையில் நின்று செல்ல, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்,'' என்றார்.

அரசு உத்தரவுபடி, அனைத்து பஸ்களும், செங்கல்பட்டு புறவழிச்சாலையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணியர் வசதிக்காக, நிழற்குடையும், அறிவிப்பு பலகையும் வைக்க, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோ.பாண்டியன், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திம்மாவரம், செங்கல்பட்டு

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X