பொது செய்தி

தமிழ்நாடு

டீக்கடைகளுக்கு கட்டுப்பாடு அலுவலர் அறிவிப்பு: உணவு பாதுகாப்பு துறை அறிவிப்பு

Added : மார் 20, 2020
Share
Advertisement

திருப்பூர்:கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டீக்கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், பல்லடம், காங்கயம், உடுமலை என அைனத்து பகுதிகளிலும் டீக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:டீ டம்ளர்களை சோப் ஆயில் போட்டு கழுவ வேண்டும். டீ மாஸ்டருக்கு காய்ச்சல் இருந்தால், உடனே அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பெரிய உணவகங்கள், நட்சத்திர உணவகங்களில் உணவு பாத்திரங்களை மிகவும் துாய்மையாக வைத்திருக்க வேண்டும்.டீக்கடைகளில் உள்ள மேஜை, சேர், கைப்பிடி என, அனைத்து பகுதிகளையும் ஒவ்வொரு முறையும் கிருமி நாசினி உதவியுடன் சுத்தம் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு, கை கழுவும் சோப்பு அளிக்க வேண்டும் என டீக்கடைக்காரர்கள், அறிவுறுத்தப்படுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X