பொது செய்தி

தமிழ்நாடு

நெல் கொள்முதல் நிலையத்தில் கோணி பை தட்டுப்பாடு

Added : மார் 20, 2020
Share
Advertisement

உத்திரமேரூர்: திருப்புலிவனம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், சாக்கு பை இருப்பு இல்லாததால், மூன்று நாட்களாக, விவசாயிகள் எடுத்து வந்த நெல், கொள்முதல் செய்யாமல் தேக்கமடைந்து உள்ளது

.உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம், முருக்கேரி, ஆனைபள்ளம் உள்ளிட்ட பல பகுதிகளில், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக, திருப்புலிவனத்தில், அரசு நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது.வெளி மார்க்கெட்டில், குறைந்த விலைக்கு நெல் வாங்குவதால், விவசாயிகள், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல்லை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.இந்நிலையில், திருப்புலிவனம் நெல் கொள்முதல் நிலையத்தில் சாக்கு பை எனப்படும் கோணி பை இருப்பு இல்லாததால், மூன்று நாட்களாக நெல் கொள்முதல் செய்யவில்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து, மேலும் அவர்கள்கூறியதாவது:நெல் கொள்முதல் செய்யாமல், நாள் கணக்கில் தேக்கி வைத்தால், நெல்லில் ஈரப்பதம் அளவு அதிகரிக்கும். இதனால், குறைபாடு காரணமாக நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுத்துவிடுவர்.கொள்முதல் நிலையம் அருகில், எந்தவித பாதுகாப்பும் இன்றி, நெல் குவியல் மற்றும் மூட்டைகளை திறந்தவெளியில் வைத்துள்ளதால், திடீரென மழைபெய்தால், நெல் வீணாகும் நிலை உள்ளது.எனவே, திருப்புலிவனம் நெல் கொள்முதல் நிலையத்தில், போதுமான அளவு சாக்கு பை இருப்பு வைத்து, விவசாயிகள் எடுத்து வரும் நெல்லை, உடனடியாக கொள்முதல் செய்ய, மாவட்ட நிர்வாகம் உடனே நட வடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், நெல் எடைபோடும் ஊழியர்கள், நெல் மூட்டை ஒன்றுக்கு, 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். இதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X