பொது செய்தி

தமிழ்நாடு

நீதிமன்றத்தில், 'கொரோனா' விழிப்புணர்வு

Added : மார் 20, 2020
Share
Advertisement

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 'கொரோனா' வைரஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு முகாம், முதன்மை மாவட்ட நீதிபதி, வசந்தலீலா தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.நீதிபதி வசந்தலீலா பேசியதாவது:பாரம்பரியத்தை கடைப்பிடித்தால், நோய்கள் இல்லாமல் வாழலாம். கொரோனா வைரஸ் குறித்து, மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர். அதன்படி, நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்றங்களில் கடைப்பிடிக்கப்படும்.நோய் குறித்த விழிப்புணர்வு முகாம்களை, அனைத்து நீதிமன்றங்களிலும் நடத்த, சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவில், வரும், 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. அதேபோல், கிழக்கு கடற்கரை சாலையில், வாகன போக்குவரத்து குறைந்து, வெறிச்சோடியுள்ளதுகாஞ்சிபுரம் நகரில், புதிய ரயில் நிலையம், நகராட்சி அலுவலகம், பஸ் நிலையங்களில், கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கும், நோய் தொற்று குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X