பொது செய்தி

தமிழ்நாடு

அவிநாசி வட்டார கோவிலில் பக்தர்கள் வருகைக்கு தடை

Added : மார் 20, 2020
Share
Advertisement

அவிநாசி:அவிநாசி வட்டாரத்திலுள்ள முக்கியமான கோவில்களில் வரும், 31ம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. தினசரி, நுாற்றுக்கணக்கான பக்தர்கள், இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், கூட்டம் கூடுவதை தவிர்க்ககோவிலில், பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.நேற்று துவங்கி, வரும், 31ம் தேதி வரை கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, கோவிலின் பிரதான நுழைவு வாயில், பூட்டப்பட்டு, அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.இதேபோல், அவிநாசி பூமிநீளாதேவி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், பெரியாபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில் என, மாவட்டத்திலுள்ள பெரிய கோவில்களில், வரும் 31ம் தேதி வைர பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X