பொது செய்தி

தமிழ்நாடு

குடைவரை சிற்பங்களில் துாய்மை பணி

Added : மார் 20, 2020
Share
Advertisement

மாமல்லபுரம்: மாமல்லபுரம், குடைவரை மண்டபங்களை, தொல்லியல் துறை துாய்மைப்படுத்துகிறது.மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால கலைச்சிற்பங்களை காண, சுற்றுலாப் பயணியர் வருகின்றனர்.கடற்கரைக் கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, பிற குடைவரைகள் என, இங்கு அமைந்து, தொல்லியல் துறை, இவற்றை பராமரிக்கிறது. இவற்றில், துாசு, பறவை எச்சம், வாகன புகை என, மாசு படிந்து, பொலிவை இழக்கின்றன.தொல்லியல் துறையினர், சில ஆண்டுகளுக்கு ஒருமுறை, இவற்றில் ரசாயன கூழ்மம் மொழுகி, உலர்ந்ததும் மாசு அகற்றி, துாய்மைப்படுத்துகிறது. தற்போது, 'கொரோனா' வைரஸ் பரவல் தடுப்பிற்காக, சிற்ப வளாகங்களை மூடியதால் வெறிச்சோடியது. இம்மாத இறுதி வரை, இந்நிலை நீடிக்கும். பயணியர் இல்லாத சூழல் கருதி, இத்துறையினர், குடைவரை சிற்பங்களில், சாதாரண முறையில் துாசு அகற்றி, கழுவி, துாய்மைப்படுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X