பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு

Added : மார் 20, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், அமையஉள்ள ஓட்டுச்சாவடிகள் வரைவு பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், தயாரிக்கப்பட்டுள்ள வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல், தேர்தல் நடத்தும் அலுவலர்களால், நேற்று வெளியிடப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 5 ஊராட்சி ஒன்றியங்களில், 1,239 ஓட்டுச்சாவடிகளும், காஞ்சிபுரம் நகராட்சியில் 198 ஓட்டுச்சாவடிகளும், ஐந்து பேரூராட்சிகளில், 146 ஓட்டுச்சாவடிகள் என, 1,583 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.இப்பட்டியல் மீது, ஆட்சேபனை மற்றும் கருத்துக்கள் இருப்பின், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பொதுமக்கள், வரும், 27ம் தேதிக்குள், அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்.இத்தகவலை, கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X