பொது செய்தி

தமிழ்நாடு

உயிரியல், வரலாறு தேர்வு சுலபம்

Added : மார் 20, 2020
Share
Advertisement
 உயிரியல், வரலாறு தேர்வு சுலபம்

திருப்பூர்:பிளஸ் 2 மாணவர்களுக்கான உயிரியல், வரலாறு, வணிக கணிதம் உள் ளிட்ட தேர்வுகள் சுலபமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், நேற்று உயிரியல் - 5 ஆயிரத்து, 343 பேரும், தாவரவியல் - 180 பேரும், வரலாறு - 928 பேரும், வணிக கணிதம் - 815 பேரும், அலுவலக மேலாண்மை தேர்வை - 57 பேரும் எழுதினர்.
அதிகபட்சமாக உயிரியல் பாடத்தில், 183 பேர் ஆப்சென்ட் ஆகினர்.தனித்தேர்வர்களில், வரலாறு பாடத்தை - 79 பேரும், வணிக கணிதத்தை 23 பேரும், உயிரியல் பாடத்தை - 3 பேரும் எழுதினர். வரும் 24ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல் தேர்வோடு பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைய உள்ளது.வினாத்தாள் குறித்து மாணவர்கள்கூறியதாவது:சுமிதா, ராமகிருஷ்ண வித்யாலயம் பள்ளி:உயிரியல் பாடத்தில் எதிர்பார்த்த கேள்விகள் அதிகம் இடம்பெற்றிருந்தன. அனைத்து கேள்விளும் எளிதில் பதிலளிக்கும்படியே இருந்தன. நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறுவேன்நாக சவுந்தர்யா, ராமகிருஷ்ண வித்யாலயம் பள்ளி:உயிரியல் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் சில, யோசித்து பதிலளிக்கும்படி இருந்தன.
அதேசமயம் ஆசிரியர் குறித்துக்கொடுத்த கேள்விகள் அனைத்தும் வந்திருந்தன. அனைவரும் பாஸ் ஆகிவிடலாம்.ரெனிஸ், கே.எஸ்.சி., அரசு பள்ளி:வரலாறு பாடத்தை பொறுத்தவரை அனைத்து கேள்விகளும் எளிதாக இருந்தது. சராசரி மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெற அதிக வாய்ப்புண்டு.முகிலன், கே.எஸ்.சி., அரசு பள்ளி:ஒரு மதிப்பெண் சற்று கடினமாக இருந்தது. ஆழமாக சிந்தித்து பதிலளிக்கும்படி இருந்தது. மற்றபடி, அனைத்து கேள்விகள் ரொம்ப ஈஸிதான்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X