பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் மரக்கன்று நடும் விழா

Added : மார் 20, 2020
Share
Advertisement

உத்திரமேரூர்: உத்திரமேரூர் காவல் நிலையம் பின்புறம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார் மன்றத்தின் சார்பில், மரக்கன்று நடும் விழா, நேற்று நடந்தது.இதில், உத்தரமேரூர் வட்டார கல்வி அலுவலர்கள், 'ஹார்ட் பீட் கிளப்' உறுப்பினர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இணைந்து பள்ளி வளாகத்தில், நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டனர்.மனை பட்டா வழங்க கோரிக்கைசெங்கல்பட்டு: செய்யூர் தாலுகா, மழுவங்கரணை கிராமத்தில், ஆதிதிராவிட மக்கள், நீண்டகாலமாக வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தில், சேரி நத்தம் வகைப்பாடு, 3 ஏக்கர் நிலம் உள்ளது. இதை, ஆதிதிராவிட மக்களுக்கு குடியிருப்பு பகுதியாக மாற்றி, வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என, 100க்கும் மேற்பட்ட பெண்கள், கலெக்டர் ஜான்லுாயிசிடம் மனு அளித்தனர். இந்த மனு மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் தெரிவித்தார்.அகரத்தில் நெல் கொள்முதல் நிலையம்வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், தென்னேரி அகரம் கிராமத்தில், நெல் கொள்முதல் நிலையம், நேற்று துவக்கப்பட்டுள்ளது.அகரம் கிராமத்தை சுற்றிலும், நெல் அறுவடை துவங்காத நிலையில், நெல் கொள்முதல் நிலையம் துவக்கி இருப்பது, பல தரப்பு விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வியாபாரிகள் நெல் வந்துவிடுமோ என்கிற அச்சமும் உள்ளது.2 குழுக்கள் அமைப்புசெங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோரை கண்டுபிடிக்க, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஓம்பிரகாஷ், டி.எஸ்.பி., கண்ணன் தலைமையில், ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.அதேபோல், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன், தொடர்பு உடைய நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க, வருவாய் கோட்டாட்சியர் ராஜகுமார் தலைமையில், மற்றொரு குழு அமைக்கப்பட்டு உள்ளது.பஸ்சில் கட்டணம் குறைப்புமாமல்லபுரம்: விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில், பஸ்களை இயக்குகிறது.இதில், எக்ஸ்பிரஸ் பஸ்களில், குறைந்தபட்ச கட்டணம், 15 ரூபாய். இக்கட்டணத்தை, தற்போது, 10 ரூபாயாக குறைத்து, அரசு உத்தரவிட்டது.இதையடுத்து, பஸ்களில், குறைந்தபட்ச கட்டணம், 10 ரூபாய் என, அறிவித்து, பயணியரிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X