அரசியல் செய்தி

தமிழ்நாடு

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே

Added : மார் 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே


கொரொனா பாதித்த நபர் உங்கள் முன் வந்து இருமவோ தும்மவோ செய்தால், வைரஸ் உங்களுக்குள் புகும். அப்படி ஒரு நோயாளியை நீங்கள் சந்திக்கும் வாய்ப்புகள் குறைவே (எங்களைப் போன்ற மருத்துவர்கள் மற்றும் அதைச் சார்ந்த பணியாளர்களுக்குத் தான் வாய்ப்புகள் அதிகம்). ஆனால் நீங்கள் தொட்ட கதவிலோ, படிகளின் கைப்பிடியிலோ, கடையில் வாங்கியப் பொருட்கள் மீதோ வேறொரு பாதிக்கப்பட்ட நபர் வைரஸை விட்டுச் சென்றிருக்கும் வாய்ப்பு அதிகம். அதைத் தொடும் உங்கள் கைகள் அந்த வைரஸை எடுத்துக்கொள்ளும். ஆனால் தோல் மூலமாக அது நம் உடம்பில் புக முடியாது. அடுத்த சில நிமிடங்களில் உங்கள் கை உங்கள் முகத்திற்குப் போகும் - மூக்கைச் சொறியவோ, கண்களைக் கசக்கவோ, வாயைத் துடைக்கவோ - அந்தச் செய்கை வைரஸை நம் உடம்பில் கொண்டு செல்லும்.
ஆக, நம் கையே நமக்கு எதிரி.

கை கழுவுதல்

பழகுங்கள், இப்பொழுதே பழகுங்கள், நம் கைகளை எப்படி முகத்திற்குக் கொண்டு போகாமல் இருப்பதென்று. வேறு வழியில்லையென்றால், கைகளைக் கழுவிவிட்டு முகத்திற்கு கொண்டுசெல்லுங்கள். வெறுமனே தண்ணீரை கைகள் மேல் ஊற்றிக் கொள்வதல்ல. கையை நனைப்பது அல்ல. முதலில் இரு உள்ளங்கைகளை இணைத்துத் தேய்க்க வேண்டும், பின்னர், ஒரு கையை மற்றொன்றின் மேல் வைத்துத் தேய்க்க வேண்டும். மூன்றாவதாக, விரல்களை விரித்து அதனுாடையே விரல்களை செலுத்தித் தேய்க்க வேண்டும். நான்காவதாக, கட்டை விரலை மற்றொரு கையால் திருகித் தேய்க்க வேண்டும். கடைசியாக ஒரு கையை குவித்து மற்றொரு கையின் உள்ளங்கையில் வட்டமாகத் தேய்க்க வேண்டும். சோப் நம் கைகளில் குறைந்தது இருபது வினாடிகளாவது தங்க வேண்டியது அவசியம்.
வீட்டில் நுழையும் முன் கண்டிப்பாக கை கழுவுதல் வேண்டும். பணிக்கு சென்றுள்ளீர்கள் என்றால், இடை இடையே கழுவுங்கள். கைகளை முகத்திற்கு கொண்டு செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.நாம் ஏன் வீட்டுடனேயே இருக்குமாறும் முடிந்த அளவிற்கு மற்றவர்களிடம் பழகாமல் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறோம்?

இந்த வைரஸ் காற்றில் மூலம் பரவுவது இல்லை. நோயாளியிடம் இருந்து வெளிவரும் வைரஸ், உயிர் இல்லாத பொருட்களில் பல மணி நேரங்கள் உயிரோடு இருக்கும்.
எல்லோரும் எல்லோருடைய இடங்களைப் பகிரும் போது எளிதாகப் பரவுகிறது. அந்த வைரஸ் எந்த மனித உடலிலும் ஏற முடியவில்லை என்றால் இறந்து விடும். இதனால் தான் வைரஸ் பாதித்தவர் என்று பரிசோதிக்கப்பட்டவரை தனிமைப் படுத்துகிறோம். ஆனால் தனக்கு இந்த நோய் இருப்பதையே உணராதவர்கள் சாதாரணமாக நடமாடிக் கொண்டிருப்பார்கள், இந்தக் கிருமியை நிறைய இடத்தில் பரவவும் செய்வார்கள்.


ஏன் முடக்க வேண்டும்ஒரு சிறிய மண்டபத்தில் ஐம்பது பேர் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்கள் எல்லோரையும், எந்த ஒரு திசையையும் குறிப்பிடாமால், அடுத்த ஒரு மணி நேரம் நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்வோம். அவர்கள் ஒருவரோடு ஒருவர் மோதும் வாய்ப்பு எவ்வளவு? கிட்டத்தட்ட 100%. முதல் 10 நிமிடங்களில் 20 பேர் முட்டியிருப்பார்கள், ஒரு மணி நேரம் கழித்து பார்த்தால் எல்லோரும் யாருடனேயாவது முட்டியிருப்பார்கள் அல்லது யாரையாவது தட்டி இருப்பார்கள்.
இப்பொழுது, அதே மண்டபத்தில் நாற்பது பேர் அவர்கள் இடத்திலேயே நிற்க வேண்டுமென்று சொல்வோம், மற்றவர்கள் நடக்கட்டும். இப்பொழுது எத்தனை முட்டுகள் நிகழும்? குறைவாகவே இருக்கும் இல்லையா? அந்தப் பத்துப் பேரில் சரியாக நடக்காத முடியாத வயதான ஒன்றிரண்டு பேர் தான் யாரையாவது முட்டுவார்கள். இப்பொழுது புரிகிறதா? நாம் நம்மை இந்த சமயத்தில் முடக்கிக் கொள்வதின் அவசியத்தை புரிந்து கொண்டீர்களா?


நாளை என்ன செய்வதுநாளை மக்கள் ஊரடங்கு. என்ன செய்ய போகிறீர்கள். வெகு நாட்களாகப் படிக்கவேண்டும் என்று நினைத்திருந்த புத்தகத்தை வெளியே எடுங்கள். தியானம் செய்துப் பழகுங்கள். ஒரு அரை மணி நேரம் உடலில் வெயில் படுமாறு அமருங்கள். மனைவியுடன் பழங்கதைகள் பேசுங்கள். உங்கள் திருமண விடியோவை கண்டு மகிழுங்கள். சமையலில் அவருக்கு உதவி செய்து அசத்துங்கள். குழந்தையுடன் விளையாடுங்கள். நம் உறவினர்களை எல்லாம் பட்டியல் போட்டு யாருக்கு யார் உறவு என்பதை விளக்குங்கள். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்தாலே (சேராமல் இருந்தாலே.....) இந்த வைரஸை வெல்ல முடியும்.--டாக்டர் பி.ஆர்.ஜெ.கண்ணன் இருதய மருத்துவ நிபுணர்மதுரைkannanbrj@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aswini Kumar - Coimbatore,இந்தியா
22-மார்-202000:30:09 IST Report Abuse
Aswini Kumar Arpudham Dr.
Rate this:
Share this comment
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
21-மார்-202015:59:05 IST Report Abuse
Vijay D Ratnam என்ன சொல்றிங்க டாக்டர், ரெஸ்ட்ல இருங்க, கைகளை சோப்பு போட்டு கழுவுங்கள், வெளியே நடமாட்டாமல் வீட்டில் இருங்க அதுவரைக்கும் சரி. அப்புறம் ஏன் டாக்டர் இந்த கொலைவெறி. மனைவியுடன் பழங்கதைகள் பேசுங்கள். உங்கள் திருமண வீடியோவை கண்டு மகிழுங்கள்னு சொல்றிங்க. ஏழரையை இழுத்து வெளியே உடுறிங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X