பொது செய்தி

தமிழ்நாடு

வட மாநில தொழிலாளர் கதி?

Added : மார் 20, 2020
Share
Advertisement

மணலி: கொரோனா வைரஸ் பாதிப்பால், உச்சக்கட்ட சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மணலி தொழிற்சாலைகளில், வேலை பார்க்கும், வடமாநில தொழிலாளர்களின் நிலை குறித்து, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துஉள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு, அதிதீவிரமாக உள்ளது. நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, தமிழக அரசு, கல்வி நிலையங்கள், 'டாஸ்மாக் பார்'களுக்கு, 31 வரை, விடுமுறை அறிவித்துஉள்ளது.தவிர, கோவில், தேவாலயங்கள், மசூதி மற்றும் போராட்டம், ஊர்வலம் என, மக்கள் அதிகம் கூட முகாந்திரம் உள்ள அனைத்து சூழலையும் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.சுகாதாரத்துறை, பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில், நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், வடமாநிலங்களான பீஹார், உ.பி., ம.பி., மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், குஜராத் போன்ற பல மாநிலங்களில் இருந்து வந்து, மணலி, சி.பி.சி.எல்., போன்ற தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் சுகாதாரம் குறித்து, சமூக ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.மணலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கி, தினமும், 5,000க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள், ஒப்பந்த அடிப்படையில், சி.பி.சி.எல்., போன்ற நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.இவர்கள், காலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக, பணிக்கு செல்கின்றனர். தவிர, ஒரே வேனில், 30க்கும் மேற்பட்டோர் நெருக்கமாக, அடைத்து கொண்டு வரப்படுவதையும் காண முடிகிறது.ஒரு வாடகை வீட்டில், 10க்கும் மேற்பட்டோர் தங்குதல், சுத்தமில்லாத கழிப்பறை, குளியலறை என, வடமாநில தொழிலாளர்களின் சுகாதாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.மக்கள் கூடுவதை தவிர்க்க, பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு, மணலி சுற்றுவட்டாரங்களில், தங்கி வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களின் நிலை குறித்து கண்காணிக்க வேண்டும்.அவர்களுக்கான சுகாதார நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்வதற்கு, தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X