பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்களில் கூட்டம் இல்லை

Added : மார் 20, 2020
Share
Advertisement

சென்னை: 'கொரோனா' வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், எக்ஸ்பிரஸ், மெட்ரோ உள்ளிட்ட பயணியர் ரயில்களிலும், நிலையங்களிலும், இரு நாட்களாக பயணியர் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.பள்ளி, கல்லுாரிகளுக்கு, 31ம் தேதி வரை விடுமுறை. தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.விமானங்கள், ரயில்கள் ரத்து, தனியார், ஐ.டி., நிறுவன ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதி என, பல அதிரடி நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, சுகாதார பாதுகாப்பு, பயணியர் என அனைவருக்கும், சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இதன் காரணமாக, சென்னையில், மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. வாகன போக்குவரத்தும் குறைவாக இருந்தது.சென்னை, விமான நிலையத்தில் இருந்து, வண்ணாரப்பேட்டைக்கு இயக்கப்பட்ட மெட்ரோ ரயில்களில் வழக்கத்தைவிட, பயணியர் கூட்டம் மிக குறைவாக இருந்தது. சென்னை, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் நிலையங்களில் இருந்து, புறப்பட்ட மற்றும் வந்தடைந்த ரயில்களிலும், வழக்கத்தைவிட, கூட்டம் குறைவாக இருந்தது.தாம்பரம் - கடற்கரை இடையே இயக்கப்பட்ட மின்சார ரயில்களில், பயணியர் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ய ஏதுவாக, இருக்கைகள் காலியாக இருந்தன. இந்நிலை வரும், 31ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X