பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு சிறப்பு வார்டு

Added : மார் 20, 2020
Share
Advertisement

குரோம்பேட்டை: தாம்பரம் சானடோரியம், அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் விதமாக, கொரோனா கண்காணிப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தாம்பரம் சானடோரியத்தில், அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை இயங்கி வருகிறது. தெற்கு ஆசியாவில் உள்ள பெரிய மருத்துவ மனைகளில், இதுவும் ஒன்று. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும், நோயாளிகள் வருகின்றனர்.இம்மருத்துவமனையில், வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்கும் விதமாக, கொரோனா கண்காணிப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள வெளி நோயாளிகள் பிரிவை, 50 படுக்கை வசதிகளுடன் கூடிய, வார்டாக மாற்றியுள்ளனர்.வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை, இங்கு, ஒரு நாள் தங்க வைத்து கண்காணிக்கின்றனர். அவர்களுக்கு, வைரஸ் தொற்றுக்கான, எவ்வித அறிகுறியும் இல்லை என்பது உறுதியானதும், வீடுகளுக்கு அனுப்புகின்றனர். வீடுகளுக்கு அனுப்பினாலும், இரண்டு வாரங்கள், தனிமையில் இருக்க வேண்டும் என்று, அறிவுறுத்தப்படுகின்றனர்.இதுவரை, 60 பேர் தங்க வைக்கப்பட்டு, வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்ட ஒருவரை மட்டும், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X