பொது செய்தி

தமிழ்நாடு

'வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்யலாம்'

Added : மார் 20, 2020
Share
Advertisement

சென்னை: 'சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி களில் வசிப்போர், வாக்காளர் பட்டியலில்திருத்தம் மேற்கொள்ளலாம்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட, 16 சட்டசபை தொகுதிகளில், சிறப்பு சுருக்க திருத்தத்தின்படி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணி நடைபெறுகிறது. எனவே, வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர்களை அணுகலாம்.மேலும், www.nvsp.in என்ற இணையதளம் வாயிலாகவோ, 1950 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு சரிபார்த்துக் கொள்ளலாம்.பெறப்பட்ட படிவங்கள் அடிப்படையில், களப் பணியாளர்களால் களஆய்வு செய்யப்பட்டு, தகுதி அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்படும்.இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய புதிய உத்தரவுப்படி, ஏற்கனவே வழங்கப்பட்ட பழைய வாக்காளர் அடையாள அட்டையை மாற்றி, புதிய அட்டை வழங்கும் பணி நடைபெறுகிறது. ஏற்கனவே புதிய அட்டைவைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X