பொது செய்தி

தமிழ்நாடு

டீக்கடையில் சுகாதார துறை ஆய்வு டம்ளர்களை வெந்நீரில் கழுவ உத்தரவு

Added : மார் 20, 2020
Share
Advertisement
 டீக்கடையில் சுகாதார துறை ஆய்வு டம்ளர்களை வெந்நீரில் கழுவ உத்தரவு

வளசரவாக்கம்: டீக்கடைகளில், டம்ளர்களை முறையாக கழுவுகின்றனரா என, சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நாட்டில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.பரிசோதனைஇதையடுத்து, சென்னை முழுவதும் உள்ள டீக்கடைகளுக்கு, உணவு பாதுகாப்பு துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதில், டீ டம்ளர்களை, சோப்பு திரவத்தைப் பயன்படுத்திக் கழுவ வேண்டும். அதன் பின், வெந்நீரில் கழுவி பயன்படுத்த வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.மேலும், டீ மாஸ்டருக்கு காய்ச்சல் இருந்தால், உடனே அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். உணவகங்களில், சமைக்கும் பாத்திரங்களை நன்கு துாய்மை செய்ய வேண்டும் என, அறிவுறுத்தியிருந்தது.குற்றச்சாட்டுஆனால், பெரும்பாலான டீக்கடைகளில், டம்ளர்களை சரிவர கழுவுவது கிடையாது. அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில், வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட டீக்கடைகள் மற்றும் உணவகங்களில், மாநகராட்சி சுகாதார துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.டீ டம்ளர்களை கழுவு வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முறையாக பின்பற்றவில்லை என்றால், நடவடிக்கை எடுக்கப்படும் என, டீக்கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X