பொது செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட்டிற்கு நாளை விடுமுறை

Added : மார் 20, 2020
Share
Advertisement
 மார்க்கெட்டிற்கு நாளை விடுமுறை

கோயம்பேடு: 'கொரோனா' முன்னெச்சரிக்கை ஊரடங்கு வேண்டுகோளையடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நாளை ஒருநாள் விடுமுறை என, வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்தியாவில், 'கொரோனா' என்ற மஹா மாரியை தடுக்க, பிரதமர் மோடி நேற்று முன்தினம், நாட்டு மக்களிடம் விழிப்புணர்வு உரையாற்றினார்.அதில் முக்கியமாக, நாளை காலை, 7:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை, அத்தியாவசிய தேவையன்றி, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என, வேண்டு கோள் விடுத்தார்.இதையடுத்து, இன்று இரவு, 12:00 மணி முதல், நாளை இரவு, 9:00 மணி வரை, கோயம்பேடு காய்கறி, பூ, பழம் மார்க்கொட்டிற்கு விடுமுறை விடப்படும் என, வியாபாரிகள் அறிவித்து உள்ளனர்.அன்றைய தினம், மார்க்கெட்டை முழுமையாக சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளிக்கப்படும் என, அங்காடி நிர்வாக குழு நிர்வாக அதிகாரி கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட் மூடப்பட்டுள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, காய்கறி வாங்க மக்கள் கூட்டம், நேற்று அதிகமாக இருந்தது.நாளை விடுமுறை என்பதால், இன்றும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து காய்கறி மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது:கடந்த, 1990களுக்கு பின், தற்போது தான், அதிகம் பேர் மார்க்கெட்டிற்கு வருகின்றனர். வழக்கத்தை விட, 50 ஆயிரம் பேர் அதிகமாக வந்துள்ளனர். கொரோனா பீதியால், அசைவ உணவுகளை விட்டு, காய்கறிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X