பொது செய்தி

தமிழ்நாடு

லாரி உரிமையாளர் போராட்டம் வாபஸ்

Added : மார் 20, 2020
Share
Advertisement

ராயபுரம்: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடிநீர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

ராயபுரம், வியாசர்பாடி மற்றும் வ.உ.சி.நகர் படேல் நகர் நீரேற்று நிலையத்தில் இருந்து, தினமும், 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த குடிநீர் லாரிகள் மூலம், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.நடவடிக்கை இல்லைகடந்த மூன்று மாதங்களாக, லாரி உரிமையாளர்களுக்கு வாடகை தொகை வழங்கப்படவில்லை. ஒரு லாரிக்கு, 3 லட்ச ரூபாயும்; மொத்தம், 2.5 கோடி ரூபாயும் வாடகை பாக்கி உள்ளது.இத்தொகையை உடனே வழங்கக்கோரி, டேங்கர் லாரி உரிமையாளர்கள் சார்பில், குடிநீர் வாரிய அதிகாரிகளிடம், பலமுறை முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் இல்லை.இதையடுத்து, குடிநீர் லாரி உரிமையாளர்கள், நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாநகராட்சி குடிநீர் வாரிய அதிகாரிகள், நேற்று குடிநீர் லாரி உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தினர்.நிலுவை தொகைகொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் குறித்தும், கை, கால்கள் கழுவுவதன் அவசியம், தண்ணீரின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனர்.முதற்கட்டமான லாரிகளுக்கு நிலுவை தொகையையும் வழங்கினர். இதையடுத்து, குடிநீர் லாரி உரிமையாளர்கள், பொதுமக்களின் நலன்கருதி போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்புவதாக அறிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X