பொது செய்தி

தமிழ்நாடு

முன்னெச்சரிக்கை நடவடிக்கை மீறல்

Added : மார் 20, 2020
Share
Advertisement

மயிலாப்பூர்: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மீறி, 300க்கும் மேற்பட்ட மக்களை கூட்டி, கணக்கெடுப்பு நடத்திய, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படுமா என, கேள்வி எழுந்துள்ளது.

மயிலாப்பூர், கபாலி தோட்டம் பகுதியில், 600க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில், மக்கள் வசித்து வருகின்றனர்.அவர்களுக்கு வீடுகள் கட்டி தருவதற்காக, கணக்கெடுக்கும் பணி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகளால், நான்கு நாட்களாக நடத்தப்படுகிறது.இந்நிலையில், நேற்று கணக்கெடுப்பின்போது, 300க்கும் மேற்பட்டோர், ஒரே இடத்தில் கூடி, தங்கள் வீடுகள் விடுபட்டுள்ளது என்றும், பாரபட்சம் காட்டி வருகின்றனர் எனவும், அதிகாரிகளை முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம் விசாரித்தபோது, 'தற்போது வரை, 220 வீடுகளுக்கு மனுக்கள் பெற்று, ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், விடுபட்டுள்ள சில வீடுகளை கணக்கெடுக்க வந்தோம்' என்று தெரிவித்தனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:எந்த முன்னறிவிப்பும்இன்றி, நான்கு நாட்களாக, நாங்கள் வேலைக்கு சென்றிருந்தபோது, கணக்கெடுத்து உள்ளனர். எங்களிடம், முறையான ஆவணங்கள் இருந்தும், பல்வேறு காரணங்கள் கூறி சேர்க்க மறுக்கின்றனர். அரசியல் தலையீடும் உள்ளது.இப்பகுதியைச் சேர்ந்த சிலர், அதிகாரிகளுடன் கூட்டணி அமைத்து, தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடின்றி, ஒரே நபருக்கு வெவ்வேறு ஆவணங்களை வைத்து, ஐந்து வீடுகள் வரை கணக்கில் சேர்த்து உள்ளனர்.கடந்த, 10 ஆண்டுகளில் இதுவரை, ஐந்து முறை கணக்கெடுக்கும் பணி நடந்துள்ளது. அவ்வப்போது வருவது,கணக்கெடுப்பது, பின் அதை கண்டுகொள்வதே இல்லை.இன்னும், 300 வீடுகளுக்கு மேல் விடுபட்டுள்ள நிலையில், சில வீடுகள் தான் கணக்கெடுக்க வேண்டியுள்ளது என, தகவல் தெரிந்ததால் நாங்கள் வந்தோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.தகவல் தெரிந்து வந்த காவல் துறையினர், குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம், கணக்கெடுப்பு பணியை நிறுத்த சொல்லி, மக்களை கலைந்து போக சொன்னதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.தற்போது, கொரோனா பரவுவதை தடுக்க, மத்திய - மாநில அரசுகள் பொது இடங்களில், மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்என, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அதை மீறி, பொதுமக்களை கூட்டி, போலீஸ் பாதுகாப்பின்றி, கணக்கெடுப்பு பணியை, அதிகாரிகள் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X