பொது செய்தி

தமிழ்நாடு

'காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிய வீடுகள்தோறும் ஆய்வு நடத்தப்படும்'

Added : மார் 20, 2020
Share
Advertisement

சென்னை: ''காய்ச்சல், சளி இருக்கிறதா என, வீடுகள்தோறும் கள ஆய்வு செய்யப்படும்,'' என, சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறினார்.சென்னை மாநகராட்சியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், முறைப்படி கை கழுவும் பயிற்சி நடத்தப்படுகிறது.

மேலும், மக்கள் கூடும் இடங்களில், கிருமி நாசினியால் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.கொரோனா வைரஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன.இந்நிலையில், கிருமி நாசினி வாயிலாக, மாநகராட்சியை சுத்தப்படுத்தும் பணிக்காக, 208 கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்களை, மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளது.அதில், மத்திய மற்றும் வடக்கு வட்டாரத்திற்கு தலா, 66, தெற்கு வட்டாரத்திற்கு, 68 வாகனங்கள் என, 200 விசைத் தெளிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், ஒரு பட்டர்பிளை வாகன தெளிப்பான்; ஏழு பெரிய புகை பரப்பும் வாகனங்கள் என, 208 வாகனங்களை, அந்தந்த வட்டாரத்திற்கு, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நேற்று வழங்கினார்.இது குறித்து, கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது:பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான, கட்டடங்கள், ஏ.டி.எம்., மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில், கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணியில், 3,000 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு, காலை, மாலை வேளைகளில், கிருமி நாசினி தெளிக்கப்படும். அதேபோல், கொசுப்புழு ஆய்வு செய்யும் பணியாளர்களை கொண்டு இருமல், காய்ச்சல், சளி ஆகிய அறிகுறிகள் இருக்கின்றனவா என்பதை வீடுகள் தோறும் கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.

அரசின் உத்தரவுப்படி, அனைத்து வழிபாட்டு தலங்கள், பயணங்கள், அதிகம் மக்கள் கூடக்கூடிய இடங்களுக்கு செல்வதை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.நிகழ்ச்சியில், துணை கமிஷனர்கள் குமாரவேல் பாண்டியன், மதுசுதன் ரெட்டி, கிரேஸ் லால்ரின்டிகி பச்சுவாவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X