பொது செய்தி

தமிழ்நாடு

களைகட்டுது சூரை மீன் விற்பனை

Added : மார் 21, 2020
Share
Advertisement

காசிமேடு: கொரோனா வைரஸ் எதிரொலியாக, சூரை மீன் விற்பனை களைகட்ட துவங்கியதால், கிலோ, 400 ரூபாய்க்கு விற்பனையானது.கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டி உள்ளது. எதிர்ப்பு சக்திகள் உடலில் இருந்தால் சளி, இருமல், காய்ச்சல் தொந்தரவுகள் வராமல் இருக்கும்.கடுமையான காய்ச்சல்காலங்களிலும் கூட, இந்த எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட்டால், அவற்றிலிருந்து மீண்டு வர முடியும்.அந்த வகையில், நோய் எதிர்ப்பு சக்தி மிக்க, வெளிநாடுகளில் ராணுவத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் சூரை மீன்கள் மீது, பொதுமக்கள் பார்வை திரும்பி உள்ளது.காசிமேட்டில் ஒரு நாளுக்கு, 50 டன் சூரை மீன் விற்பனைக்கு வருகிறது. முன்பு, கிலோ, 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மீன், தற்போது, 250 ரூபாய்க்கும், சுத்தம் செய்யப்பட்ட மீன், கிலோ, 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இது குறித்து, சூரை மீன் மொத்த விற்பனையில் ஈடுபடும், அகில இந்திய மீனவர் சங்க செயல் தலைவர், ரவி கூறியதாவது:சூரை மீன் ரத்தம் உறைவதை தடுத்து, இதய நோய், பக்கவாதம், கெட்ட கொழுப்பு படிவது உள்ளிட்டவற்றை குறைக்கிறது.உடலுக்கு ஆற்றல் அளிக்கக்கூடிய ஒமேகா, 3, 6 மற்றும் 12 ஆகியவை கொண்டது. கர்ப்பப் பை, வாய், உணவுக் குழாய், பெருங்குடல், மார்பகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோயை, 50 சதவீதம் அளவுக்கு குறைக்கிறது.ஜப்பான், ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் ராணுவத்திற்கு மட்டும், தற்போது, 85 சதவீதம் முதல், 90 சதவீதம் சூரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது இதன் விற்பனை, 50 மடங்கு அதிகரித்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X