போலீஸ் டைரி...

Added : மார் 21, 2020
Share
Advertisement

இம்சை கணவனுக்கு, 'கம்பி!'எம்.ஜி.ஆர்.நகர்: எம்.ஜி.ஆர்., நகர், ஜாகிர் உசைன் தெருவைச் சேர்ந்தவர், அனிதா, 34. இவரது கணவர் சரவணன், 35. அதே பகுதியில், மொபைல் கடை நடத்தி வருகிறார். இவர், மாமனாரிடம் பணம் பெற்று வருமாறு, மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். அவரது கொடுமை தாங்காமல், பலமுறை, தந்தையிடம் அனிதா பணம் பெற்று கொடுத்துள்ளார். இந்நிலையில், நான்கு நாட்களாக, அனிதா மற்றும் குழந்தையை வீட்டில் பூட்டி வைத்து, கட்டையால் அடித்து துன்புறுத்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அங்கிருந்து தப்பிய அனிதா, எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில், நேற்று புகார் அளித்தார். போலீசார், சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மொபைல் பறித்த சிறுவர்கள் கைதுபுழல்: புழல், திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் சோனியா, 26; தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு, புழல், ஜி.என்.டி., சாலையில் இருந்து, அம்பத்துார் செல்லும் அணுகு சாலையில், வீட்டுக்கு மொபைலில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது, டூ - வீலரில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவரது மொபைல் போனை பறித்து தப்ப முயன்றனர். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், மொபைல் பறிப்பில் ஈடுபட்ட, 17 வயது சிறுவர்கள் இருவரை பிடித்து, சிறார் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.கத்திமுனையில் நகை பறிப்புமதுரவாயல்: நெற்குன்றம், சக்தி நகர், 18வது தெருவைச் சேர்ந்தவர், நேதாஜி, 24. இவர், சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளையில், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு பயின்று வருகிறார். நேற்று மதியம், மதுரவாயலில் உள்ள தன் நண்பர் வீட்டிற்கு சென்றார். மதுரவாயல், கார்த்திகேயன் நகர் அருகே நடந்து சென்ற போது, காரில் வந்த மூன்று மர்ம நபர்கள், நேதாஜியை வழிமறித்தனர். பின், கத்தியை காட்டி மிரட்டி, ஒன்றரை சவரன் செயின் மற்றும் 500 ரூபாய் பறித்து சென்றனர். மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சா விற்றவருக்கு, 'காப்பு!'வண்ணாரப்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை, கிழக்கு கல்லறை சாலையில் உள்ள வீட்டில், கஞ்சா பதுக்கி விற்பதாக, வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியில், நேற்று சோதனை நடத்தி, அதே பகுதியைச் சேர்ந்த, மணிகண்டன், 31, என்பவரை கைது செய்தனர். இவர், ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை, பாரிமுனையில் உள்ள கடை ஊழியர்களுக்கு, 'சப்ளை' செய்து வந்தது தெரிய வந்தது. இவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.வாலிபரை தாக்கியவர் பிடிபட்டார்அம்பத்துார்: அம்பத்துார், திருவள்ளூவர் நகரைச் சேர்ந்தவர் ரத்தீஷ், 26. இவர் நேற்று முன்தினம் இரவு, அம்பத்துார், கள்ளிக்குப்பம் அணுகுசாலையில், டூ - வீலரில் சென்ற போது, எதிரே மற்றோரு இருசக்கர வாகனம் மோதுவது போல் நின்றது. இது குறித்து தட்டிக்கேட்டபோது, அந்த நபர் தன் மனைவி மற்றும் சகோதரருடன் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். விசாரித்த அம்பத்துார் போலீசார், சண்முகபுரத்தைச் சேர்ந்த மெத்தை வியாபாரியான நரேஷ்குமார், 28, என்பரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது மனைவி ஜோதிகா, 20, அண்ணன் சுரேஷ்குமார், 30, ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X