பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னையில் கொரோனா  வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

சென்னை: கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக, மக்கள் வெளியில் செல்வதை குறைக்கும் வகையில், மாநகர பஸ்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கும், 'டீலக்ஸ்' பஸ்கள் அதிகமாக இயக்கப்பட்டதால், பயணியர் அவதியடைந்தனர்.சிக்னல்களில் அறிவுறுத்தல் அண்ணாசாலை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை, வாகன ஓட்டிகள் அறிந்தும் கொள்ளும் வகையில், ஒவ்வொரு சிக்னல்களிலும் போக்குவரத்து போலீசார் அமைத்து வருகின்றனர். மேலும் ஒலி பெருக்கி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதுமட்டுமல்லாமல் ஆட்டோக்கள், கால்டாக்சிகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

நகராட்சி தீவிரம்

குரோம்பேட்டை: பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் சார்பில், குரோம்பேட்டை மற்றும் அஸ்தினாபுரம் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் வளாகம், நகராட்சி மருத்துவமனைகள், கடைகளில், சுகாதாரத் துறையினர், நேற்று, கிருமி நாசினி தெளித்தனர். பேருந்துகளின் வெளிப்புறத்தை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதேபோல், திறந்திருந்த பெரிய கடைகளை மூடுமாறு, நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.நடனமாடி விழிப்புணர்வுசூளைமேடு: நேற்று மாலை சூளைமேடு சிக்னல் அருகில், காவல் துறை அனுமதியுடன், 'சகோதரன்' அமைப்பைச் சேர்ந்த திருநங்கையர் கலைக்குழுவினர், நடனத்தின் மூலமாகவும், துண்டு பிரசுரங்களை வழங்கி, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சிறப்பு தொழுகை

செங்குன்றம்: புழல், மாதவரம், செங்குன்றம், பாடியநல்லுார் சுற்றுவட்டாரங்களில் உள்ள மசூதிகளில், வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை, 20 நிமிடங்களில் முடித்துக்கொள்ளப்பட்டது. இதில், அரசின் கொரோனா விழிப்புணர்வு மற்றும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைக்கு, இஸ்லாமியர்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.மஞ்சள் நீர் தெளிப்புகுன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், நம் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவில் நிர்வாகம் சார்பில், வளாகம் முழுவதும் மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டது.

தேவாலய நிகழ்ச்சி ரத்து

சாந்தோம்: சாந்தோம் தேவாலயத்தில் மார்ச், 31ம் தேதி வரை நடைபெற இருந்த, அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. மக்கள், தினசரி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளை, வீட்டில் இருந்தபடியே ஈடுபட வேண்டும்.ஆலயத்தில் குழுவாக கூடி, பிரார்த்தனையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என, மயிலை மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தரிசனம் நிறுத்தி வைப்பு

திருவொற்றியூர்: இன்று, சனி பிரதோசம் என்பதால், திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், தரிசனம் ரத்தால், இக்கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட, தட்ஷிணாமூர்த்தி, அகத்தீஸ்வரர், பட்டினத்தார், பொன்னியம்மன் கோவிலுக்கு படையெடுக்க நேரிடும். எனவே, அந்த கோவில்களும், சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில், தற்காலிகமாக தரிசனம் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பூஜைகள் குறிப்பிட்ட வேளைகளில், முறையாக நடக்கும். தரிசனம் நிறுத்தி வைப்பு மட்டும், 31ம் தேதி வரை தொடரும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
santhakumari - chennai,இந்தியா
21-மார்-202012:27:43 IST Report Abuse
santhakumari DLF போரூர் CTS பணியாளர்கள் வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதிக்கவில்லை . அரசு நடவடிக்கை என்ன?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X