பொது செய்தி

தமிழ்நாடு

வட கிழக்கு மாநிலத்தவர்கள் தவிப்பு : உதவி கோரி கமிஷனர் ஆபீசில் மனு

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை: 'சென்னையில், வணிக வளாகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், திக்கற்றவர்களாக தவிக்கும், வட கிழக்கு மாநிலத்தவர்கள் தங்குவதற்காவது வசதி செய்து தர வேண்டும்' என, போலீசில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

அருணாச்சல், அசாம் மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலத்தவர்கள், தோற்றத்தில், சீனாவைச் சேர்ந்தவர்கள் போலவே இருப்பர். இவர்கள், தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் அதிகம் பேர் வசிக்கின்றனர்.மேலும், தனியார் விடுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் விடுதிகளில் தங்கி, கல்லுாரிகளில் படித்து வருகின்றனர்.தற்போது, உலகையை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவியதால், தோற்றத்தில், அந்நாட்டவர்கள் போலவே இருக்கும், வட கிழக்கு மாநிலத்தவர்கள் மீது, மர்ம நபர்கள் தாக்குதல் நடத்துவதாக கூறப்படுகிறது.இது குறித்து, வடகிழக்கு மாநிலத்தவர் நலச்சங்க தலைவர் வபாங்க் தோஷி உள்ளிட்ட நிர்வாகிகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்துள்ள கோரிக்கை மனு:கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, சென்னை உட்பட, பல நகரங்களில், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், ஓட்டல்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.அங்கு பணியாற்றிய மற்றும் படித்து வரும் வட கிழக்கு மாநிலத்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நாங்கள் தோற்றத்தில் சீனாவைச் சேர்ந்தவர்கள் போல இருப்பதால், மர்ம நபர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.தங்குவதற்குகூட இடமில்லாமல் திக்கற்றவர்களாக தவிக்கின்றனர். ரயில்கள் மற்றும் விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு இருப்பதால், சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில், உணவு கூட தர வேண்டாம். அங்கு தங்குவதற்காக இட வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், டில்லியை போன்று, சென்னையிலும், எங்களுக்கு உதவி செய்ய, 24 மணி நேரமும் செயல்படும், சேவை மையம் திறக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X