பொது செய்தி

தமிழ்நாடு

பி.எஸ்.என்.எல்.,லில் இலவச, 'பிராட் பேண்ட்'

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை: வாடிக்கையாளர்கள் பாதுகாப்பை கருதி, கட்டணம், ரீசார்ஜ் போன்றவற்றை, 'ஆன்லைன்' வாயிலாக மேற்கொள்ளுமாறு, சென்னை பி.எஸ்.என்.எல்., அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து, சென்னை பி.எஸ்.என்.எல்., தலைமைப் பொது மேலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க, வாடிக்கையாளர்கள் தங்களது லேண்ட்லைன், பிராட்பேண்ட், மொபைல் போன் போஸ்ட்பெய்டு கட்டணம் மற்றும் ரீசார்ஜ் போன்றவற்றை, ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ள வேண்டும். இதற்காக, portal.bsnl.in என்ற இணையதளம் மற்றும் 'My BSNL' என்ற 'ஆப்'பையும் பயன்படுத்தலாம்.மேலும், பிராட்பேண்ட் இல்லாமல், லேண்ட்லைன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, 'வொர்க் அட் ஹோம்' என்ற, ஒரு மாதத்திற்கான இலவச பிராட்பேண்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், நாளொன்றுக்கு, 10 எம்.பி.பி.எஸ்., வரையிலான வேகத்தில், 5 ஜி.பி., வரை இன்டர்நெட் பயன்படுத்தலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X