பொது செய்தி

தமிழ்நாடு

சித்த மருத்துவமனையில் நியமன நெறிமுறை கூட்டம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

தாம்பரம்: தேசிய சித்த மருத்துவமனையில் நடந்த, நியமன நெறிமுறை கமிட்டி கூட்டத்தில், நோயாளிகளின் வாழ்க்கை முறைகளை உயர்த்துவது குறித்த, ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.தாம்பரம் சானடோரியத்தில், தேசிய சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது.இங்கு, சித்த மருந்துகளின், மருத்துவ நெறிமுறைகளை கண்காணிப்பதற்கும், நோயாளிகளுக்கு மருந்துகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்கவும், நியமன நெறிமுறை கமிட்டி செயல்படுகிறது.இந்த கமிட்டி சார்பில், ஆண்டுதோறும் இருமுறை, சித்தா, ஆங்கில மருத்துவத்தின் மூத்த டாக்டர்கள், வழக்கறிஞர், பொதுமக்களில் ஒருவர் முன்னிலையில் கூட்டம் நடத்தப்பட்டு, புதிய மருந்துகள் கண்டுபிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும்.இந்தாண்டிற்கான முதல் கூட்டம் நேற்று நடந்தது. இதில், முதலாமாண்டு பட்டமேற்படிப்பு மாணவர்கள், 46 பேர், தங்களின் சிறு ஆய்வு திட்டங்களை எடுத்துரைத்தனர்.அதில், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், குழந்தைகளை பாதிக்கும் ஊட்டச்சத்து நோய்கள், பெண்களுக்கான கருப்பை மாதவிடாய் நோய்கள் உட்பட, பல முக்கிய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின், வாழ்க்கை முறைகளை உயர்த்துவது, அவர்களை குணப்படுத்துவது குறித்த, ஆய்வறிக்கைகள் இடம்பெற்றன.இதை, கமிட்டி உறுப்பினர்கள் ஆய்வு செய்து, அதற்குரிய முறையான ஒப்புதல்களை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X