பொது செய்தி

தமிழ்நாடு

வீடற்றோருக்கு மாநகராட்சி அழைப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை: 'சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, வீடற்றோர் காப்பகங்களில் தங்கலாம்' என, மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து, மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநகராட்சி கட்டுப்பாட்டில், 38 காப்பகங்கள், 13 சிறப்பு காப்பகங்கள் என, 51 காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, பிரதமர் மோடி, நாளை, பொதுமக்கள் தாங்களாகவே ஊரடங்கு உத்தரவு மேற்கொள்ள கேட்டு கொண்டு உள்ளார். அதன்படி, அன்றைய தினம், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடற்றோர்கள், மாநகராட்சி காப்பகங்களில் தங்கி பயன் பெறலாம். அவர்களுக்கு, மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்படும். இது தொடர்பான விபரங்களுக்கு, 1913 அல்லது 044 - 2530 3849; 94451 90472 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் காப்பகங்களின் முகவரி, தகவல்கள் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X