பொது செய்தி

தமிழ்நாடு

மெரினாவிற்கு வராதீங்க பிளீஸ்!

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை: விடுமுறை தினங்களை கழிப்பதற்காக, சுற்றுலா தலமான மெரினாவிற்கு வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என, காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. அதுமட்டுமின்றி, கோவில்கள், அருங்காட்சியகம், பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.மேலும், சில தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணியாற்ற உத்தரவிட்டுள்ளன.அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், யாரும் தங்களது குடும்பத்துடன் விடுமுறையை கழிப்பதற்காக சுற்றுலா தலமான மெரினாவிற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என, காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

அதையும் மீறி வருவோருக்கு, அறிவுரை வழங்கி திருப்பி அனுப்ப காவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X