தொழிலாளர்களுக்கு, கொரோனா விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர்களுக்கு, 'கொரோனா' விழிப்புணர்வு

Added : மார் 21, 2020
Share

சென்னை: ''தொழிற்சாலைகளில், 'பயோமெட்ரிக்' முறையை தவிர்த்துக் கொள்ளுங்கள்,'' என, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர், கார்த்திகேயன் அறிவுறுத்தினார்.

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் சார்பில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, 'கொரோனா' குறித்து விழிப்புணர்வு முகாம், சிப்காட் திட்ட அலுவலகத்தில் நடத்தப்பட்டது.ஐ.சி.எம்.ஏ., தலைவர், ராஜமாணிக்கம் தலைமையில் நடந்த இம்முகாமில், கும்மிடிப்பூண்டி, சிப்காட் தொழிற்பேட்டை பகுதிகளில் உள்ள, 85 தொழிற்சாலைகளைச் சேர்ந்த, நிர்வாகிகள் பங்கேற்றனர்.விழிப்புணர்வு முகாமில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர், எம்.வி.கார்த்திகேயன் பேசியதாவது:தொழிற்சாலைகளில், 'பயோமெட்ரிக்' முறையை தவிர்த்துக் கொள்ளுங்கள். தொழிலாளர்களுக்கு, உடலின் வெப்பநிலையை கண்டுபிடிக்கும் கருவியை வைத்து, நுழைவாயிலில் ஆய்வு செய்த பின்னரே, தொழிற்சாலைகளில் அனுமதியுங்கள்.அனைத்து தொழிலாளர்களுக்கு, முக கவசம் வழங்க வேண்டும். கழிப்பறைகளில் கிருமி நாசினியை உபயோகப்படுத்த அறிவுறுத்துங்கள். இதனால், 'கொரோனா' வைரசை அடியோடு ஒழிக்க முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.சுகாதார இயக்ககத்தில் பணிபுரியும், மருத்துவ அலுவலர், வெங்கட் ராமன், கைகளை எவ்வாறு சுத்தம் செய்வது என்றும், காய்ச்சல், இருமல் நேரங்களில் தொழிற்சாலைக்கு வருவதை தவிர்க்குமாறும், தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தினார். முகாமில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர், சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் நாகராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X