பொது செய்தி

தமிழ்நாடு

நல்லுார் ஒன்றியத்தில் குப்பை அள்ள பேட்டரி வாகனங்கள்

Added : மார் 21, 2020
Share
Advertisement

வேப்பூர்: நல்லுார் ஒன்றிய ஆறு ஊராட்சிகளில் குப்பைகளை அள்ளுவதற்கு பேட்டரி வாகனங்கள் வந்துள்ளது.நல்லுார் ஒன்றியத்தில் 64 ஊராட்சிகள் உள்ளது. இங்கு வீடுகள் தோறும் தள்ளு வண்டி மூலம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரித்து வருகின்றனர். மக்கள் தொகை அதிகமுள்ள ஊராட்சிகளில் தள்ளு வண்டி மூலம் குப்பைகளை சேகரிக்க முடியாத நிலை உள்ளது.துாய்மை பாரத இயக்கம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் நல்லுார் ஒன்றிய ஊராட்சிகள் தோறும் பேட்டரி வாகனங்கள் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக வேப்பூர், பெரியநெசலூர், சேப்பாக்கம், சவுந்திர சோழபுரம், தொளார் ஊராட்சிகளுக்கு தலா ஒரு வாகனமும், இறையூர் ஊராட்சிக்கு ௨ வாகனங்களும் வழங்கப்படுகிறது.விரைவில் அனைத்து ஊராட்சிகளுக்கும் வழங்க வேண்டும் என அப்பகுதி ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேட்டரி வாகனங்கள் வழங்குவதால் துப்புரவு பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X