பொது செய்தி

தமிழ்நாடு

அரசு டெப்போவில் கொரோனா

Added : மார் 21, 2020
Share
Advertisement

பண்ருட்டி: பண்ருட்டி போக்குவரத்து பணிமனையில் கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம் நடந்தது.பண்ருட்டி போக்குவரத்து பணிமனையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ,அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு தொழில்நுட்பம் துணை மேலாளர் செல்வம் தலைமை தாங்கினார்.கிளை மேலாளர் வெங்கடேசன் வரவேற்றார். உதவி மேலாளர் சுந்தர் ராகவன், கிளை மேலாளர்கள் நெய்வேலி கிருஷ்ணமூர்த்தி, வடலுார் அருண், நெய்வேலி வசந்தராஜா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணை மேலாளர் செல்வம் பணிமனைக்கு வரும் அனைத்து பஸ்களும், கிருமி நாசினி தெளித்த பின்பே தடத்திற்கு அனுப்ப வேண்டும். அனைத்து தொழிலாளர்களும் மாஸ்க் அணிந்து பணிபுரிய வேண்டும்.அவ்வ போது சோப்பை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்தவும். டிக்கெட் மெஷின், டிக்கெட் புக் ஆகியவை கிருமி நாசினி தெளித்து துடைத்த பின்னரே அடுத்த பஸ் தடத்திற்கு வழங்க அனுமதிப்பது. வெந்நீர் அருந்தவும், கேண்டீனில் வெந்நீர் கலந்த எலுமிச்சை சாறு வழங்கவும் அறிவுரை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X