பொது செய்தி

தமிழ்நாடு

நகரப்பாடி சாலையில் ஆக்கிரமிப்புகள் அளவீடு

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அடுத்த நகரப்பாடி கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யும் பணி நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் அடுத்த நகரப்பாடி கிராமத்தில் ஆதி திராவிடர்கள் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற கோரி அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வந்தனர்.இதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்,மற்றும் உள்ளாட்சி தேர்தலின் போது தேர்தல் புறக்கணிப்பு போராட்டங்கள் நடத்தினர்.அப்போது ஆக்கிரமிப்பு பகுதியில் பயிர் சாகுபடி இருந்ததால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அதன் பின்னர் ஆக்கிரமிப்புகள் அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.அதன் பின்னர் பணிகள் ஏதும் நடக்காததால் மீண்டும் போராட்டங்கள் நடத்த பொதுமக்கள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் புகழேந்தி, ஆர்.ஐ. கோவிந்தன், குறுவட்ட நில அளவர் ரமேஷ், வி.ஏ.ஓ. வெங்கடாஜலபதி ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யும் பணி நடந்தது. இதில் 7 ஏக்கர் அளவிலான நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது.இதன் பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை பொதுமக்களுக்கு அளந்து அத்து கல் நட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X